Tagged: இன்றைய வசனம் தமிழில்
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வந்து பிறந்த ஒவ்வொருவருவரும் நிலைவாழ்வு பெற்றிட வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவன் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16. இப்பேற்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சாயலாய் உருவாக்கப்பட்ட நாம் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்புக் கூர்ந்து தூய உள்ளத்தோடு ஆழ்ந்த அன்பு காட்டிடுவோம். பழைய ஏற்பாடு புத்தகம் விடுதலை பயணம் 21:23,24,25ல் வாசிப்போமானால் அதில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், கைக்கு கை,காலுக்கு கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம் என அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு கடவுள் கட்டளை பிறப்பித்தார். அதே சமயம் புதிய ஏற்பாடு புத்தகம் மத்தேயு 5:38 லிருந்து வாசித்துப்பார்ப்போமானால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:...
Like this:
Like Loading...
அன்பும், பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் படும் பாடுகளை நமது ஆண்டவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவைகளை நமக்கு நன்மையாக மாற்றித் தர ஆவலோடு காத்திருக்கிறார். அந்த பாதையின் வழியில் கடந்து செல்லும் பொழுது அதின் மேடு, பள்ளங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமாய் சில கஷ்டங்கள் நேரிடும். ஆனால் அது எப்போதும் நீடிக்காது. மேடு, பள்ளங்களை நாம் அறிந்துக்கொண்டால் அதற்கு தகுந்தவாறு நாம் நடப்போமல்லவா, அதை நாம் கண்டுக்கொள்ளவே அதை அனுப்புகிறார். ஏனெனில் அவர் நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை பெயர் சொல்லி கூப்பிட்டு அறிந்து வைத்திருக்கிறார். அதனால் நாம் எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாதபடிக்கு அவரிடத்தில் சந்தோஷமாக இருப்போம். நாம் நீதித் தலைவர்கள் [நியாயாதிபதிகள்] புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் சிம்சோனை பற்றி வாசிக்கிறோம். சிம்சோன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே கர்த்தருடைய தூதன் அவர்களை சந்தித்து இதோ நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை பெறுவாய். அவன் தலையின்மேல் சவரகன்...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நம்மத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய தேவனாகிய ஆண்டவர் நம் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து நமது கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். அதுக்கு நாமும் அவருடைய வார்த்தையை அசட்டை செய்யாதபடிக்கு ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசித்து தியானித்து அதன்படியே நடந்தோமானால் நம்மை எந்த தீங்கும் அணுகாமல் வலக்கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். நாம் தெரியாமல் வலப்பக்கம் இடப்பக்கம் சாயும்பொழுது வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உணர்த்தி காத்தருள்வார். நாம் 1 சாமுவேல் 14ம் அதிகாரத்தை வாசிப்போமானால் அதிலே இஸ்ரேயேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் எல்லைக் காவலை வைத்து இஸ்ரயேல் ஜனங்களை சிறைப்பிடிக்க எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தினர். ஆனால் சவுலின் குமாரன் யோனத்தான் ஆண்டவர் பேரில் உள்ள நம்பிக்கையால் தனது ஆயுததாரியாகிய வாலிபனிடம் விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணையத்திற்குப் போவோம் வா: ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்.அநேகம்பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும் நம்மை மீட்க ஆண்டவருக்கு எந்த தடையும் இல்லை என்று...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பானவர்களுக்கு நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது முழு நம்பிக்கையையும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேலேயே வைத்து நமது நம்பிக்கையில் நிலைத்திருப்போம். நாம் எந்த ஒரு செயலையும் செய்யாவிட்டாலும் நமது ஆண்டவர்மேல் முழு நம்பிக்கையும் வைத்து காத்திருந்தோமானால் அந்த நம்பிக்கையின் பொருட்டு நம்மை நீதியுள்ளவர்களாக கடவுள் நினைப்பார். ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாக கருதினார். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் இது முடியவே முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தில் நிச்சயமாக கடவுளால் முடியும் என்று நம்பிக்கையில் உறுதிப்பட்டால் அப்பொழுது அந்த நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அதை நிறைவேற்றி தருவார். ஏனெனில் நம்பிக்கை அத்தனை பெலம் வாய்ந்தது. இதைத்தான் உரோமையர் 4:5 ல் இவ்வாறு வாசிக்கிறோம். தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரையும், அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால்...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆண்டவரின் பாதத்தில் நம்மை ஒப்புவித்து அவரையே சார்ந்து அவரையே பற்றிக்கொண்டால் அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்து கோழி தன் குஞ்சுகளை காக்கும் வண்ணமாய் நமது ஆண்டவரும் நம்மை பாதுக்காத்து வழிநடத்துவார். நாம் இந்த உலக பிரமான காரியத்தில் ஈடுபடும் முன்னே அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம், அதற்காக எவ்வளவோ பிரயாசப்பட்டு ஆயத்தமாகிறோம். ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டுமானால் அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுக்கிறோம். ஒரு பரீட்சைக்கு தயாராக வருஷ கணக்கில் படிக்கிறோம். அதுவே ஆண்டவரின் காரியத்தில் நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறோம்? எவ்வளவு நேரம் ஜெபம் செய்கிறோம்? ஆராய்ந்து பார்ப்போம். அழிந்து போகும் காரியத்துக்கு அவ்வளவு நேரத்தை ஒதுக்கும் நாம் அழிவில்லாத நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் ஆயத்தமாகிறோம் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியிடம்...
Like this:
Like Loading...