Tagged: இன்றைய வசனம் தமிழில்
இந்த உலகில் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்திருக்கிறார். நாம் நமக்கு கொடுத்திருக்கும் வேலையில் மட்டும் நம் கவனத்தை செலுத்தி அதை உண்மையோடும், நேர்மையோடும் செய்து ஆண்டவருக்கு பயந்து செயல்படுவோம். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருடனும் கூடவே இருந்து நம்மை கண்ணோக்கிக்கொண்டு தான் இருக்கிறார். நம் செயல்களை ஆராய்ந்துப் பார்த்து நம்மைபிறரோடு ஒப்பிடாமல் நம்மையே பெருமை பாராட்டாமல் நம் சுமையைத் தாங்கிக்கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை பிறர்க்கு செய்து அவர்களுடைய சுமையையும் தாங்கிக்கொள்வோம். இதற்காகவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார். ஒரே சபையாக ஒரே குடும்பமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பின் பாதையில் நடந்து ஆண்டவரின் திருநாமத்திற்கு புகழையும், மகிமையையும் சேர்த்து, நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்துக்கு நன்மை செய்ய முன் வருவோம்.அவர்களின் சுமைகளை நாமும் தாங்கினால் அப்பொழுது ஆண்டவர் நம்மேல் இன்னும் அன்பு வைத்து நம்மை அதிகதிகமாய் ஆசீர்வதிப்பார். சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துனை நன்று. எத்துனை இனியது. அது ஆரோனின் தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை...
Like this:
Like Loading...
இயேசுகிறிஸ்து தெய்வ மகனாய் இந்த உலகத்தில் வந்து அவரின் சாயலாய் படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரும் மேலும் அன்புக்கூர்ந்து நமது தேவைகளைச் சந்தித்து நம்மை அளவில்லாமல் ஆசீர்வதித்து காத்து வருவதோடல்லாமல்,இந்த நாளிலும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து என் மகனே! என் மகளே! உனக்கு என்ன வேண்டும் கேளுங்கள் அப்பொழுது அவைகளை உங்களுக்கு கொடுக்க ஆவலாய் இருக்கிறேன் என்று சொல்கிறார். கேட்கிற யாவருக்கும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார். அது எப்பேற்பட்ட காரியமானாலும் அவருக்கு இலேசான காரியம். அவரின் சித்தப்படி கேட்டால் இன்னும் கூடுதலான ஆசீர்வாதத்தை நாம் பெற்ற்றுக்கொள்வது உறுதியான விஷயம்.அதில் அதிகப்படியான ஆசீரை காணலாம்.என் வாழ்க்கையில் இதை கண்டிருக்கிறேன். என்னைத்தேடி வந்து மீட்டு இதுவரை அவரின் கண்ணின் மணியைப்போல் காத்து வழிநடத்தி வருகிறார். நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய 20 வது வயதில் தான் இயேசு ஒரு கடவுள் என்று தெரியும். மற்ற கடவுளைப் போல் அவரும் ஒரு கடவுள் என்று நினைத்தேன். அதனால் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். அவரின் வார்த்தையாகிய வேதத்தை வாசிக்கவில்லை. எனக்கு...
Like this:
Like Loading...
அன்பானவர்களே! நமக்கு ஆண்டவர் விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தால் அப்போது உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்துவேன் என்று வாக்கு அருளியிருக்கிறார். அவர் அருளிய வாக்கை கடைப்பிடிப்பதில் ஒரு கஷ்டமும் இல்லையே! அப்படியிருக்க நாம் ஏன் அவர் விதிக்கும் கட்டளைக்கு கீழ்படிந்து செவிகொடுக்கக் கூடாது? ஏன் அதை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருக்கக் கூடாது? ஒவ்வொருவரும் யோசித்து அதன் வழியே நடப்போம். உலகப்பிரமாண காரியங்களில் நாம் ஈடுபட்டு இருக்கும் பொழுது நம் மேலதிகாரிக்கு எவ்வளவாய் பயந்து காரியங்களை செய்கிறோம். நமது ஆண்டவரோ வானத்தையும், பூமியையும், காற்றையும், கடலையும், உலகில் உள்ள யாவையையும் உண்டாக்கிய கடவுள். அப்படியிருக்க நாம் அவருக்கு எவ்வளவாய் பயந்து பயபக்தியோடு நடக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் யோசித்து அதன்படியே செயல்படுவோம். நாம் அவ்வாறு நடந்தோமானால் அப்பொழுது நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்தி நாம் செல்லும் இடமெங்கும் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார்.கருவின் கனியையும், நிலத்தின் பயனையும் கால்நடைகளின் ஈற்றுகளையும், மாடுகளின் கன்றுகளையும், ஆடுகளின் குட்டிகளையும், நம் வீட்டில் உள்ள பொருளாதாரத்தையும் காத்து...
Like this:
Like Loading...
நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாம் கடவுளை பின்பற்றி அவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்போமானால் நம்முடைய செயல்பாட்டை வெறும் பேச்சில் அல்லாது அதை செயல்பாட்டில் காண்பிக்கிறவர்களாய் வாழ வேண்டும். ஆண்டவர் கட்டளையிடும் அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து உண்மையாய் நடந்தால் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளாதபடிக்கு நமது மன விருப்பங்களின் படி செய்து இதுதான் கடவுள் விரும்பும் காரியம் என்று பாவ வாழ்க்கையில் ஈடுபட்டால் நம் செயல்பாட்டில் குறை உள்ளவர்களாய் ஆவோம் நமக்கு நாமே தீர்ப்பளித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வேதத்தில் நாம் வாசிப்பது படி எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்.அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்: உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது...
Like this:
Like Loading...
இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான்கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து, அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15.ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக் கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் . ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால்...
Like this:
Like Loading...