Tagged: இன்றைய வசனம் தமிழில்
இந்த செய்தியை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் யோசித்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன்.இது எங்கோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத நடந்த சம்பவம் கிடையாது.இது வரலாற்று உண்மை.நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இதன் உண்மையை புரிந்துக் கொள்ளலாம். கி.மு 605 – 536 ஆகிய நிறைந்த வருஷங்களில் பாபிலோனில் அரசாண்ட நேபுகாத்நேசர் என்னும் மன்னன் யூதா நாடாகிய எருசலேம் என்னும் நாட்டை பிடித்து அங்குள்ள மக்களை சிறைபிடித்து,கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை 70 வருஷம் அடிமைப் படுத்தி வைத்திருந்தது வரலாற்று உண்மை.அவன் சிறைப்பிடிக்க காரணம் யூதா மக்களின் பாவத்தினால் கடவுள் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.ஆனாலும் இரக்கம் நிறைந்த கடவுள் அவர்களை 70 வருஷம் கழித்து அவர்கள் நாட்டுக்கு திரும்பும் படி கிருபை அளித்தார். அவருடைய பிள்ளைகளை ஏதோ கோபத்தில் கொஞ்ச வருஷம் கைவிட்டாலும் அவரின் பேரன்பினால் மறுபடியும் அவர்களை...
Like this:
Like Loading...
கடவுள் இந்த உலகத்தில் ஆதாமையும்,ஏவாளையும்,தமது சாயலாக படைத்து அவர்களை நோக்கி இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார். ஆனாலும் நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அப்படி புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர்களோ ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் அந்த பழத்தை சாப்பிட்டதனால் சாவை சந்தித்தனர். ஆனாலும் நாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையே ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவரின் ஆவி இந்த உலகை நிரப்பியுள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது.தண்டனை வேளையில் நீதியின்று தப்ப முடியாது. ஆகையால் இயேசு இந்த உலகில் மானிட அவதாரம் எடுத்து நாம் யாவரும் வாழ்ந்திருக்கும்படி அவர் நம்முடைய பாவங்களையும்,அக்கிரமங்களையும் சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்காக கொடுத்து நம்மை மீட்டுள்ளார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்து கொள்வர். அவரின் அன்பில் நம்பிக்கை கொள்வோர் என்றென்றும் அவரோடு நிலைத்திருப்பர். அருளும்,இரக்கமும்,அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். இறைபற்றில்லாதவர்கள் தங்கள்...
Like this:
Like Loading...
ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து அவர் பலிபீடத்தண்டையில் வரும் யாராயிருந்தாலும் எதற்காகவும் கலங்கவும்,அஞ்சவும்,தேவையில்லை. அவரை நோக்கி நமது உள்ளத்தை உயர்த்தி அவரைப் பற்றிக்கொள்பவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. ஏனெனில் அவர் இரக்கமும், பேரன்பும்,கொண்டவர்.அவருடைய பீடத்தண்டையில் அடைக்கலான் குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் கூட அடைக்கலம் உண்டாம் .தி.பா.84:3. அப்படியிருக்க அவருக்கென்று அவரைப்போல் படைக்கப்பட்ட நமக்கு எவ்வளவு அடைக்கலம் உண்டு என்பதை அறிந்துக்கொள்வோம். ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் அவரைப் புகழ்ந்துக்கொண்டே இருப்பார்கள். நம்முமுடைய சரீரமே ( உடலே ) ஆண்டவரின் ஆலயமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவியானவர் நம் இதயத்தில் குடியிருக்கிறார் என்று 1 கொரிந்தியர் 3 : 16 ல் வாசிக்கிறோம். ஆகையால் நாம் உண்மை உள்ளவர்களாய் அவருக்கு பயந்து கீழ்படிந்து நடப்போமானால் அப்பொழுது நம்மை முற்றிலும் பொறுப்பெடுத்துக்கொண்டு நம் கால் கல்லில் இடராதபடிக்கும்,ஒரு தீங்கும் அணுகாத படிக்கும் நம்மை காத்துக்கொள்வார். ஆண்டவரின் பீடத்தண்டையில் போகாமல் அவரை நோக்கி பாராமல் இருந்தால் எப்படி நமக்கு...
Like this:
Like Loading...
இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில் தூசி படியவிட்டுவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள். “வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு எங்கெங்கோ தேடினார்களாம்...
Like this:
Like Loading...
ஒருவரும் மற்றவருக்கு தீமைக்குத் தீமை செய்யாதபடி எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுவோம். ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். கர்த்தராகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்.தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும், எல்லோரையும் குணம் ஆக்குபவராகவும் சுற்றித்திரிந்தார் என்று அப்போஸ்தலர் 10:38 ல் வாசிக்கிறோம். கடவுளாகிய இயேசுவுக்கே அந்த பரிசுத்த ஆவியானவர் தேவைஎன்றால் நம் எல்லோருக்கும் எவ்வளவாய் தேவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ! தூய ஆவியை பெற்றுக்கொண்டால் மாத்திரமே நம்மால் நன்மை செய்ய முடியும். ஆவியின் கனிகள் இல்லாவிட்டால் நம்மால் நன்மை செய்ய முடியாது. தீமைக்கு தீமைத்தான் செய்வோம். ஆண்டவரின் அன்பும், மனதுருக்கமும், பொறுமையும், மன்னிக்கிற குணமும் இருந்தால் மட்டுமே நன்மை செய்ய முடியும். கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு ஜெபம் பண்ணுகையில் அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகளாக தரையில் விழுந்தது. நம்முடைய பாவங்களையும், நோய்களையும், துன்பங்களையும் அவர் ஏற்றுக்கொண்டு சிலுவையை சுமந்து...
Like this:
Like Loading...