Tagged: இன்றைய வசனம் தமிழில்
ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் கடைசி காலத்தின் செயல் பாடுகளை நமக்கு அறிவிக்கும் பொழுது இவைகளை சொன்னார். ஆண்டவரின் வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? என்று கேட்ட தமது சீடர்களிடம் இயேசு கூறியது,நெறிதவறி செய்யாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். நானே மெசியா என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும், போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நடக்கும்,முடிவாகா, நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும், நில நடுக்கங்களும் ஏற்படும். இவை அனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே உங்களை துன்புறுத்தி கொல்வதற்கென ஒப்புவிப்பார். இயேசுவின் பெயரை பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பார். அப்பொழுது பலரின் நம்பிக்கை இழந்து விடும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பர். ஒருவரை ஒருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றி பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும். ஆனால் இறுதிவரை மன உறுதியோடு இருப்பவரே மீட்பு பெறுவார் என்று மத்தேயு 24:4 to...
Like this:
Like Loading...
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அவரின் வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாளின் செய்தி நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் ஏதாவது ஐயம் உண்டோ! ஒருநாள் சமாரிய நகர வாயிலில் எலிசா ஆண்டவரின் வாக்கை கூறி ஆண்டவர் கூருவது இதுவே: ” ஒரு மரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக் காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும்,விற்கப்படும் என்று கூறினார். அப்பொழுது அரசனின் உதவியாளன் அவரிடம், இதோ பாரும்! எலிசாவே ஆண்டவர் வானத்தின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்கிறான்.அதற்கு எலிசா இதை உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்,என்று சொன்னார். 2 அரசர்கள் 7:1,2 ஆகிய வசனத்தில் வாசிக்கலாம். ஆம்,ஆண்டவரின் வார்த்தை ஒருபோதும் மாறாது. அது சொன்னால் சொன்னதே!அது வெறுமையாய் திரும்பி வரவே வராது. எலிசா சொன்னதுபோல ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக்காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும், விற்கப்பட்டது. அந்த அரசனின் அதிகாரி தன் கண்களால் காண நேரிட்டது. ஆனால் எலிசா சொன்னது போல...
Like this:
Like Loading...
ஆண்டவரின் திருச்சட்டம் நமக்கு அனைத்து காரியங்களையும் போதித்து வழிநடத்துகிறது. அதனால்தான் அதின் வழியில் நடப்போர் பேறுபெற்றோர் ஆகிறார்கள். அவரின் திருச்சட்டம் நமக்கு கடினமான காரியத்தை சொல்லவில்லை. அது முழுதும் அன்பின் வழியாகவும், ஒழுக்கத்தின் வழியாகவும் உள்ளது. ஆண்டவரின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து அநீதி செய்யாமல் அவரின் கட்டளைகளை எல்லாம் கடைப்பிடித்து நடந்தோமானால் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆபிரகாம் ஆண்டவரில் முழுதும் நம்பிக்கை வைத்து தமது விசுவாசத்தை காத்துக்கொண்டார். யாக்கோபு ஆண்டவருக்கு பொருத்தனை செய்தபடி தனக்கு கிடைத்த எல்லாவற்றிலும் தசமபாகம் ஆண்டவருக்கு அளித்து தமது நீதியை நிலைநாட்டினார். யோசேப்பு தான் வாலிபவயதிலும் பொல்லாப்புக்கு விலகி ஆண்டவருக்கு பயந்து நடந்தார். மோசே பார்வோன் அரண்மனையில் வளர்ந்தாலும் அந்நிய தெய்வமான எகிப்தின் சிலை வழிப்பாட்டுக்கு விலகி தமது மக்களோடு சேர்ந்து பாடுகள் அனுபவித்தாலும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து அவரின் சிநேகதரானார். எஸ்தர் தன்னுடைய இன மக்கள் அழிந்து போகாதவாறு மூன்று நாள் பகலும், இரவும் உபவாசம் இருந்து தம் மக்களை மீட்க தமது உயிரை பணயம்...
Like this:
Like Loading...
கடவுளைத் துதியுங்கள்.அவர் கிருபை என்றும் உள்ளது என்று தாவீது சங்கீதம் 107:1ல் சொன்னதுபோல நாமும் சொல்வோம். ஏனெனில் அவர் கிருபை இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் கடந்து வந்தபொழுது ஆண்டவரின் மகிமையை கண்கூடாக கண்டு அவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மறுபடியும் ஆண்டவரை நோக்கி கூப்பிடும் பொழுது அன்பே உருவான தேவன் அவர்கள் கூப்பிடுதலுக்கு செவிக்கொடுத்து அவர்களின் எல்லா இக்கட்டுகளில் இருந்தும் காப்பாற்றினார். கானான் நாட்டை காணும் முன் ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்து பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே ஆண்டவரை நோக்கி கூப்பிட்டார்கள். அப்பொழுதெல்லாம் ஆண்டவர் அவர்கள் ஆத்துமாவை திருப்தியாக்கி, நன்மையினால் நிரப்பினார். அவருடைய கிருபையின் நிமித்தமும், அவர் மனுஷர் மேல் வைத்த பிரியத்தின் நிமித்தமும் அப்படி செய்தார். அந்தகாரத்திலுள்ள மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து, தமது வசனத்தை அனுப்பி அவர்களைக்குணமாக்கி, எல்லா அழிவுக்கும் விலக்கி காத்தார். ஏனெனில் அவரின் கிருபையின் நிமித்தமும், மனுஷர் மேல்...
Like this:
Like Loading...
இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ”பாவிகள்” என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ”பாவிகளோடு” சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார். பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப்...
Like this:
Like Loading...