Tagged: இன்றைய சிந்தனை

விழிப்பாயிருங்கள்

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ”விழிப்பாயிருங்கள்” என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ”விழிப்பு” என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ”விழிப்பாயிருத்தலோடு” நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார். வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு...

செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார். இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து...

அருங்குறிகள் வெளிப்படுத்தும் செய்தி

காலத்தின் அருங்குறிகளைப்பார்த்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாதவர்கள் வரப்போகின்ற அழிவிலிருந்து தங்களைக்காப்பாற்றிக் கொள்வது இயலாத காரியம் என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கை விடுக்கிறார். கிறிஸ்து பிறப்பின் தயாரிப்பு காலத்திற்கு முன்னதாக, உலக முடிவையும், இறுதி நாட்களின்போது நிகழும் காரியங்களையும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். காரணம் நாம் ஒவ்வொரு மணித்துளியும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்தக்கருத்தின் அடிப்படையில் இன்றைய நற்செய்தியை வாசித்தால், இயேசு நமக்குச்சொல்ல வருகிற செய்தியை அறிந்துகொள்ளலாம். வரப்போகிற நிகழ்வு கண்டிப்பாக நிகழும். அது திடீரென்று நிகழும். வரப்போகிற நிகழ்விற்கு இப்போதே நாம் தயாராக இல்லையென்றால், அதை நம்மால் எதிர்கொள்ள முடியாது. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றால், அது நிச்சயமாக முடியாது. ஆனால், அதற்கான அருங்குறிகள் நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த அருங்குறிகள் வரும்போதே நாம் நம்மை நன்றாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. நோவாவிற்கு அழிவு வரப்போவதை நடந்த அருங்குறிகளால் கண்டுகொள்கிறார். அவருடைய உள்ளம் வரப்போகிற நிகழ்விலிருந்து,...

எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை. முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழிப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் இணைந்தே செல்ல வேண்டும். தாய்த் திருச்சபையின்...

வாழ்வைக் காத்துக் கொள்ளும் வழி

இந்நாட்களில் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழ்ந்தால் பல இழப்புக்கள். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள். ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாது. பின் வாங்கவும் முடியாது, கூடாது. இத்தகைய சூழல்களில் இன்றைய இறைவாக்கு ஆறுதலாக இருக்கிறது. “என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது”. (லூக் 21’17-18) இறைவனை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். நான் யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்ற பவுலடியார் தன் வாழ்வி அடுக்கடுக்காக துன்பங்களை அனுபவித்தபோதும் துவண்ட விடவில்லை. கிறிஸ்துவுக்காக வாழ்வதால் நம் பொருட்களுக்கு சேதம் உண்டாக்கலாம். பெயரை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். சலுகைகளை இழக்கலாம். பதவி இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். குடும்பமே காட்டிக்கொடுக்கலாம். அஞ்ச வேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம்....