Tagged: இன்றைய சிந்தனை

அனைத்து ஆன்மாக்கள் தினம்

இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு தரக்கூடிய செய்தி என்ன? ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர், நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும், என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான், நாட்களை...

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும். இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள்...

எனை நான் கொடுத்தேன் இறைவா!!!

மற்றவர்களுக்கு கொடுக்கிற நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதை சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கொடுத்தலில் பல வகைகள் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பது முதல் வகை. இது ஏதோ நாம் செய்ய வேண்டியது என்பதுபோல, மற்றவர்களின் மீது இரக்கமில்லாமல் “ஏதோ” மனநிலையோடு கொடுப்பது. இது சரியானது அல்ல. எதிர்பார்த்து கொடுப்பது. இது ஒருவகையான முதலீடு போன்றது. இப்போது நான் கொடுக்கிறேன், எனக்குத்தேவை இருந்தால், எனக்கு ஏதாவது ஆதாயம் வேண்டுமென்றால் இதன் மூலம் சரிகட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பது இரண்டாம் வகை. இதுவும் சரியான பார்வை அல்ல. மதிப்பிற்காக கொடுப்பது. தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது. கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தங்களின் பலத்தை, அதிகாரத்தை, உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகக் கொடுப்பது. இதுவும் சரியான மனநிலை அல்ல. கடைசி வகை: உள்ளுணர்வால் உந்தப்பட்டு கொடுப்பது. யோசனையோடு அல்ல, எதிர்பார்த்து அல்ல, தன்னை...

உண்மையான மன்னிப்பு

விடுதலைப்பயணம் 22: 1 ல் நாம் பார்க்கிறோம்: ”ஆட்டையோ, மாட்டையோ ஒருவர் திருடி வெட்டிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்”. 22: 4 ”அவர் திருடின மாடோ கழுதையோ, ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக கொடுப்பர்”. 22: 7 ”ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால், திருடர் இருமடங்காக ஈடுசெய்ய வேண்டும்”. மேற்கண்ட, அனைத்து இறைவார்த்தைகளின் அடிப்படையில், சக்கேயு இயேசுவிடம் பேசுகிறார். இதேபோல், தவறுகளுக்கு அபராதமாக ஒருவர் செய்ய வேண்டிய பரிகாரத்தை, எண்ணிக்கை நூலில் நாம் பார்க்கிறோம்: 5: 7 ”தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். லேவியர் 6: 5 ம், இதையே வலியுறுத்திக்கூறுகிறது. இங்கே சக்கேயு, தான் மனம் மாற்றம்...

மதிப்புப் பெறுதல் !

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம். ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார். மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை...