எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?
திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும். கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல் தான் இந்த வரிகள். ஒருவன் எவ்வளவு தான், தன்னை நல்லவனாகக்...