கடவுளின் பராமரிப்பு
பார்வையற்ற மனிதரை இயேசு குணப்படுத்துகிற நிகழ்ச்சி இன்றைக்கு தரப்பட்டுள்ளது. பிறவியிலே பார்வையற்ற மனிதருக்கு குணப்படுத்துகின்ற புதுமை இந்த ஒன்றுதான். பார்வையற்ற அந்த மனிதர் சீடர்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். எனவேதான் அவர் பிறவியிலேயே பார்வையற்றவராக இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். யூதர்கள் எப்போதுமே பாவத்திற்கும், துன்பத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பினார்கள். எனவேதான் சீடர்கள் அந்த மனிதன் குருடனாய் பிறந்ததற்கு அவனுடைய பாவமா? பெற்றோர் செய்த பாவமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவன் பிறவியிலேயே குருடன். பின் எப்படி அவன் செய்த பாவம் காரணமாக இருக்கமுடியுமென்று. கிரேக்க அறிஞர்; பிளேட்டோவின் ‘ஆன்மா’ பற்றிய கருத்தை யூதர்கள் நம்பினர். ஆன்மா என்பது ஓர் உயிர் உருவாவதற்கு முன்னதாகவே இருக்கிறது என்ற கோட்பாட்டை நம்பினர். எனவே, பார்வையற்றவன் பிறப்பதற்கு முன்னதாகவே, அவனுடைய ஆன்மா தவறு செய்திருக்கும், எனவேதான் அவன் குருடனாய் பிறந்திருக்கிறான் என்பது சீடர்களின் வாதம். இயேசு...