Tagged: தேவ செய்தி

ஆறுதலின் இறைவன்

நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார். இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக...

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார். ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது....

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில்...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்

எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த...