அவரைப் போல …!
என் மட்டில் கடவுளின் அன்பு அளவற்றது என்பதை மறந்து பிறர் செய்த தவறுகளை நான் மன்னிக்கின்றேனா என்பதை சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு, நாம் இன்னும் ஆன்மீகத்தில் ஆழச் செல்ல உதவுகின்றது. மன்னிக்கின்றவனே வாழத் தெரிந்தவன், வலிமையானவன். ஆனால் பல நேரத்தில் நாம் பிறரை அடக்கி ஆளும் போதும், பிறர் என் பேச்சினை அப்படியே கடைபிடிப்பார்கள் என்று கூறுவதில்தான் பெருமை கொள்கிறோம். பிறரைப் பழி வாங்குவதே சிறந்த தலைமைப் பண்பு என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். காரணம் இவ்வுலகம், குறிப்பாக மாயக் கவர்ச்சிகளைக் கொண்ட திரைப்படங்களின் கதைக்கரு அனைத்தும் பழிவாங்கும் படலமாகவே இருக்கின்றது. பழிவாங்குபவனே கதாநாயகன், மன்னிப்பவன் கோழை என்ற மனநிலைக்கு இன்றைய உலகம் நம்மைத் தள்ளி விட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி நம் முதுகில் தட்டி ‘திரும்பிப் பார் ராஜா’ என்று அன்போடு அழைக்கின்றது. உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என் கடனையெல்லாம்...