அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்
யோவான் 20 : 1-9 செய், சொல் இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய், திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை. இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள் தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம் கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும் மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக் கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14) ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப் பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின் சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும்...