Tagged: தேவ செய்தி

பேதுருவின் இறையனுபவம்

திருத்தூதர் பணி 9: 31 – 42 திருத்தூதர் பேதுரு செய்கிற வல்ல செயல்களை, அற்புதங்களை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுகமும், இறந்து போனவர்க்கு உயிரும் கொடுக்கிறார். இயேசுவோடு வாழ்ந்தபோது, பல அற்புதங்களை செய்ய முடியாமல் இருந்தவர், இப்போது தனியாகவே அற்புதங்களைச் செய்வது, நிச்சயம் அங்கிருந்தவர்க்கெல்லாம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். எப்படி இவரால் இவற்றைச் செய்ய முடிகிறது? என்கிற கேள்வி மக்களின் உள்ளங்களை துளைத்தெடுத்திருக்க வேண்டும். ஒரு குழந்தை தன் தாய் இருக்கிறபோது, நடந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த குழந்தை நடக்கிறபோது கீழே விழுந்துவிட்டால், அது மீண்டும் எழ முயற்சிக்காது. மாறாக, அழ ஆரம்பிக்கும். தாய் தன்னை தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கும். அதே குழந்தை தாய் இல்லாத நேரத்தில், நடந்து வருகிறபோது கீழே விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்குமிங்கும் பார்க்கும். தொடர்ந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இயேசுவோடு...

திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20 சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம் தொடக்க கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த...

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை....

தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்

இன்று திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் யாக்கோபு இருவரின் விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவர்களின் மாதிரியைப் பின்பற்றி நாமும் வாழ முயல்வோம்.   புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள் 1 கொரி 15: 1-8 யோவா 14: 6-14 இன்றைய நற்செய்தி வாசகம் பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. “ என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்று இயேசு சொன்னபோது, பிலிப்பு ஆர்வத்துடன் சொல்கிறார்: “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்”. ஆம், அன்புக்குரியவர்களே, தந்தை இறைவன்மீது பிலிப்பு கொண்ட ஆர்வத்தையும், இறையனுபவத்தைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் தேவையற்றவை எனக் கருதும் மனநிலையையும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். “அனைத்திற்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்களை நினைவுபடுத்துகிறார் பிலிப்பு. “இறைவனே நமக்குப் போதும்” என்ற மனநிலையின் முதல் அடியை இன்று...

ஒட்டுமொத்த உலகத்தின் மீட்பு

யோவான் நற்செய்தியாளரின் வார்த்தை ஒவ்வொன்றுமே பொருள் உள்ள, அர்த்தம் தரக்கூடிய வார்த்தை. அந்த வகையில், நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிற 153 என்கிற எண்ணுக்கு ஏதோ ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று, விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இதற்கு பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், விவிலியத்தின் தந்தை ஜெரோம் கொடுக்கிற விளக்கம் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில் வாழும் மக்கள் 153 வகையான மீன்கள் இருப்பதாக நம்பினர். இந்த எண், மீன்களின் வகையைக் குறிப்பதாக இருக்கலாம். எல்லா வகையிலிருந்தும் ஒரு மீன் என்ற அடிப்படையில் இது பொருள் கொடுக்கலாம். அதாவது, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து வகையான மக்களும், இயேசுவில் ஒருநாள் ஒன்றுகூட்டப்படுவர். அதேபோல இவ்வளவு மீன்கள் கிடைத்தும் வலை கிழியாமல் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. திருச்சபை எத்தனை எண்ணிக்கையில் மக்கள் அதனைத் தேடி வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்வைத்தரக்கூடிய அளவுக்கு மிகப்பெரியது, வலிமையுடையது என்பதை, இது நமக்கு எடுத்துச் சொல்கிறது. மீட்பு என்பது...