நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல் மாறுவோம்.
அன்பும், பாசமும் நிறைந்த அன்பின் நெஞ்சங்களுக்கு நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய இதயங்களை சோதித்து பார்ப்போம். இதயம் என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வசனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? மேலோட்டமாக வாசித்து விட்டுவிடுகிறோமா? அல்லது வாசித்து, தியானித்து அதன்படியே வாழ்ந்து நமது வாழ்க்கையில் உண்மையோடும், தூய்மையொடும் இருந்து அந்த வசனம் முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன்தரும்படி செயல் படுகிறோமா?என்று யோசித்து பார்ப்போம். மத்தேயு 13:8,23 , மாற்கு 4:20 , மற்றும் லூக்கா 8:8. இறைவார்த்தைகளை ஒவ்வொருநாளும் கேட்டு அதை உறுதியாக பற்றிக்கொண்டு சோதனை காலங்களிலும் சோர்ந்து போகாமல் கடவுள்மேல் முழு நம்பிக்கையை வைத்து அவரையே நோக்கி பார்த்து நம் தேவைகளை தந்தருள வேண்டுமாய் அவரின் பாதத்தை பற்றிக்கொள்வோம். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது நாம் எப்படி வாழவேண்டும் என்று பல உவமைகள் மூலம் நமக்கு விளக்கி காட்டியுள்ளார். வழியோரம் விதைக்கப்பட்டவர்கள் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தைகளை கேட்டு புரிந்து கொள்ள மாட்டார்கள். பாறைப்பகுதியில் விதைக்கப்பட்டவர்கள் இறைவார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியோடு...