இயேசு கிறிஸ்து நமக்காக சாவை ருசித்து ஏற்றுக்கொண்டார்.
ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுக்குல மைந்தனாய் நமக்காக வந்து நம்முடைய பாவங்களை போக்கி நம்மை மீட்டு தமது தந்தையிடம் அழைத்து செல்ல தம்மையே ஜீவ பலியாக இந்த நாளில் ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டெடுத்த நாள். நமக்கு முன் மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்த அவரின் வாழ்க்கையை பாடமாக வைத்து நாமும் அவரின் பாதையில் நடப்போமாக. நேற்றைய தினத்தில் பாஸ்கா திருவிருந்தில் தமது சீடர்களோடு கலந்துக்கொண்டு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைபெற்று உண்ணுங்கள்: இது எனது உடல், என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்: பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில் தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்: அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சொல்கிறேன், என்றார். அதன்பின்னர் இயேசு தமது சீடர்களோடு கெத்சமனி என்னும் இடத்திற்கு போய் அங்கே...