துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை
மத்தேயு 13:44-46 “கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும்....