முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வோம்
கடவுள் தம்மை மக்கள் தேடவேண்டும், தட்டித் தடவியாவது தம்மைக்கண்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக உயிரையும், மூச்சையும், மற்றனைத்தையும் கொடுத்தார். மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்கு தேவையில்லை. ஏனெனில் ஒரே ஆளிலிருந்து மக்களினம் முழுவதையும் படைத்து அவர்களை மண்ணுலகில் குடியிருக்கச் செய்தார். குறிப்பிட்ட காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். அவர் சொல்ல ஆகும்,அவர் கட்டளையிட நிற்கும்.நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்கிறவர் அவரே! நம்மை நோயிலிருந்தும், தீராத பிரச்சனைகளில் இருந்தும் கடன் பிரச்சனையிலிருந்தும், நம்மை காப்பவர் அவரே. ஒவ்வொரு நாளும் நம்மை கரம் பிடித்து கண்மணியைப்போல் காப்பவர் அவரே! நமது விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் தருபவர் அவரே! அவரே நமக்கு கட்டளையிடுகிறவர்.அவர் கரத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் சிறந்ததாய் இருக்கும். ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்தும் தெய்வம் அவரே. அவரையே நாம் ஒவ்வொரு நாளும் துதித்து ஆராதிப்போம். ஏனெனில்,நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம்முடைய தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவர் பட்ட காயங்களால் நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறார். நமக்காக சிறுமைப்பட்டு,...