கடவுள் தமது பேரன்பால் நம்மை எதிர்கொள்ள வருவார்.தி.பா 59 : 10
துன்ப வேளைகளில் என்னை நோக்கி கூப்பிடுங்கள்: உங்களைத் காத்திடுவேன். நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். தி.பா 50 : 15. கடவுள் நம்மேல் வைத்த பேரன்பினால் நாம் எப்பொழுது கூப்பிட்டாலும் நம் முன் வந்து நிற்பார். நம்மூடைய உள்ளார்ந்த மனக்கண்களால் காண முடியும். அதற்காகவே இந்த உலகில் வந்து ஒரு மனிதனாக பிறந்து நம்மைப்போல் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து சென்றுள்ளார். அதனால் நம்முடைய எல்லா கஷ்டங்களையும், துன்பங்களையும், அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கேற்ற பலி நொறுங்குண்ட நெஞ்சமே: நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை அவமதிக்கமாட்டார். ஏனெனில் அவரே சோதனைக்குட்பட்டு துன்பப்பட்டதால் சோதிக்கப் படுவோருக்கு உதவிச் செய்ய அவர் வல்லவரும், நல்லவருமாயிருக்கிறார். எபிரெயர் 2:18. ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியும்:நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டு பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம் பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்று எரேமியா 15 :15 ல் வாசிப்பதுபோல நாமும் ஆண்டவரை நோக்கி மன்றாடினால் நம் ஜெபத்தைக் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் விலக்கி...