ஒரு துண்டு காகிதம்
ஒரு நாள் 10 வயது நிரம்பிய ஒரு சிறுமி ரோட்டில் மிகவும் கவலையோடு நடந்து போய்க்கொண்டு இருந்தாள். அப்போது வழியில் கீழே ஒரு துண்டு காகிதம் கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து எடுத்தாள் . அதில் இருந்த வாசகத்தை அவள் படித்தாள் . ” ஜெபத்தைக் கேட்கிறவர் இயேசுகிறிஸ்து ” என்று எழுதியிருந்தது. அதைப்படித்ததும் அவள் உள்ளத்தில் இரு தெய்வீக சமாதானம் ஆட்கொண்டது. ஆனால் அவளுக்கோ இயேசுகிறிஸ்து யார்? என்று தெரியாது. யார் இந்த இயேசுகிறிஸ்து ? அவர் எப்படி இருப்பார் ? இவர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பாரா ? என் ஆசையை கவலையை தீர்த்து வைப்பாரா? என்று யோசித்துக்கொண்டே தனது வீடு வந்து சேர்ந்தாள் . வீட்டில் நுழையும் போதே தன் அப்பாவும், அம்மாவும் சண்டைப்போடும் சத்தம் காதில் விழவே பயந்து அப்படியே கவலையோடு ஒரு மூலையில் பதுங்கி நின்றாள். அவள் அப்பாவோ தினமும் குடித்து விட்டு வந்து அம்மாவை அடிப்பார். இது தினம், தினம் நடக்கும் சம்பவம். இவள் அருகில் போனால் இவளுக்கும்...