கடவுளின் ஆட்சியை பெற்றுக்கொள்வோம்
நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார். இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம். நம்மால் ஆன உதவிகளை பிறர்க்கு செய்வோம்.இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும் அவ்வாறு நடப்போம். நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா! நமது தேவைகளை கொடுப்பார். ஆனால் நாம் நமது நம்பிக்கையில் ஒருபோதும் குறைந்து விடாதபடி இருக்க...