செல்வத்தின் சாபம்
செல்வந்தன், ஏழை இலாசர் உவமையின் தொடக்கத்தில், செல்வந்தன் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை, ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு தெளிவாக விளக்குவதைப் பார்க்கிறோம். அவன் உடுத்தியிருந்த உடைகள் தலைமைக்குரு உடுத்தும் உடைகள். சாதாரண மனிதனின் தினக்கூலியை விட பல மடங்கு அதிக மதிப்பைக் கொண்டது. உண்பது, குடிப்பது – இதுதான் அவனுடை தினசரி வேலையாக இருந்தது. விடுதலைப்பயணம் 20: 9 சொல்கிறது: ”ஆறுநாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்”. ஓய்வுநாளை அனுசரிப்பது மட்டும் புனிதம் அல்ல, மற்றநாட்களில் ஓய்ந்திராமல் வேலை செய்வதும், புனிதமான மதிப்பீடாக கடவுளால் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. பாலஸ்தீன நாடு மிகவும் செல்வம் கொழிக்கும் நாடல்ல. அங்கே ஏழைகள். வறியவர்கள் ஏராளமானபேர் இருந்தனர். வாரத்தில் ஒருநாள் இறைச்சி உண்டாலே, அது மிகப்பெரிய பாக்கியம். இப்படித்தான் அவர்களின் பொருளாதாரம் இருந்தது. இப்படிப்பட்ட நாட்டில், உழைக்காமல் உணவை வீணடிக்கிற செல்வந்தனின் செயல், கண்டிக்கப்படுகிறது. மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளுக்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது....