அழைப்புக்கேற்ற வாழ்வு வாழுவோம்
யூதப்பாரம்பரியப்படி விருந்தினர்களுக்கு இரண்டு முறை அழைப்பு கொடுக்கப்படுகிறது. விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுவான ஒரு அழைப்பு முதலிலும், விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மற்றொரு முறையும் விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். முதல் முறையே அழைப்பு கொடுக்கப்படுவதால், விருந்தினர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டியது அவா்கள் காட்டும் மரியாதையைக் குறிக்கிறது. தயார் இல்லையென்றால், அழைப்பை அவமதிப்பதாக பொருள். இந்த விருந்து உவமை யூதர்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது. யூதர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். கடவுள் அவர்களை தனது இனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், கடவுளின் மகன் இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் பின்னால் அவர்கள் செல்லவில்லை. மாறாக, உதாசீனப்படுத்தினார்கள். எனவே, அவர்கள் அதற்கான விளைவை நிச்சயமாக சந்திக்க வேண்டும். இங்கு, விருந்தை உதாசீனப்படுத்திய அழைக்கப்பட்டவர்கள் தலைவரின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகிறார்கள். விளைவு பயங்கரமானதாக இருக்கிறது. கடவுளின் மகனை அடையாளம் கண்டுகொண்டு, கடவுளைப்பற்றிக்கொள்ளவில்லை என்றால், யூதர்களும் இதே விளைவைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொருவருமே...