முரண்பாடு
இயேசு மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி வருந்துகிறார். தனது வருத்தத்தை சந்தைவெளியில் சிறுபிள்ளைகளின் மனப்பாங்கில் வெளிப்படுத்துகிறார். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையை இந்த உவமை வாயிலாக இயேசு படம்பிடித்துக்காட்டுகிறார். இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப்பார்த்தனர்? என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக்கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய...