Tagged: தேவ செய்தி

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 வாழ்க்கை என்னும் கொடை தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே...

நானே உண்மையான திராட்சைச்செடி

இயேசு திராட்சைச் செடியைப்பற்றிப் பேசுகிறபோது, திராட்சைச்செடியைப்பற்றி நன்றாக அறிந்தவராகப்பேசுகிறார். பாலஸ்தீனத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திராட்சைச்செடி வளர்க்கப்படுகிறது. திராட்சைச்செடியை வளர்க்கிறபோது, அதற்கான தனிக்கவனம் செலுத்த வேண்டும். திராட்சைச்செடி தன் வசதிக்கு ஏற்றாற்போல கொடிகளைப்படரவிட்டாலும், அது நல்லமுறையில் வெட்டப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனால் பயன் ஒன்றும் இல்லை. இயேசு இந்த உவமையை யாருக்குச்சொல்கிறார்? இரண்டு விளக்கங்கள் தரப்படுகிறது. முதலாவதாக, யூதர்களைப்பார்த்து இந்த உவமையைச்சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேல் இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். பழைய ஏற்பாடு முழுவதும் இஸ்ரயேல் இனம் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. அது கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்தாலும், தன்போல வளரமுடியாது. அவ்வப்போது கடவுள் இறைவாக்கினர் வழியாக, இஸ்ரயேல் இனம் மற்ற இனங்களுக்கு ஆசீயாக இருக்கும் வண்ணம் கண்டித்து திருத்துவார். அப்படி திருந்தாதவர்கள், அதற்கான தீர்ப்பைப்பெறுவார்கள். இரண்டாவது, அது கிறிஸ்தவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவர்களில் பலர், தொடக்ககாலத்தில், பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும் என்ற அழைப்பு இதன் மூலமாக தரப்படுகிறது....

இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52 இறைவனோடு கொண்டிருக்கிற உறவு யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத்...

நீரே என் மைந்தர்

திருப்பாடல் 2: 6 – 7, 8 – 9, 10 – 11 ”நீரே என் மைந்தர்” தாவீது அரசர் இஸ்ரயேலின் மக்களின் அரசராக திருநிலைப்படுத்தப்பட்டபோது பலவிதமான எதிர்ப்புக்கள் எழுந்தன. கடவுள் இறைவாக்கினர் சாமுவேல் மூலமாக அவரை, இஸ்ரயேல் மக்களுக்கு தலைவனாக ஏற்படுத்தினார். தாவீது தொடக்கத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், காலப்போக்கில் அவர் அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த பிண்ணனியில், இஸ்ரயேல் மக்களின் மெசியாவைப் பற்றி இந்த திருப்பாடல் நமக்கு முன்னறிவிக்கிறது. நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தொடங்கியபோது, அதிகாரவர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களின் பேராதரவு அவருக்கு இருந்தாலும், அதிகாரவர்க்கம் தங்களின் அதிகாரத்தினால், அவரைச் சிலுவைச்சாவுக்கு கையளித்தது. ஆனாலும், தன்னுடைய உயிர்ப்பு மூலமாக, இயேசு தன்னை நிலைநிறுத்துகிறார். அரசர் என்பவர் மக்களால் அல்ல, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர். கடவுள் அவரை கைவிட மாட்டார். அவர் எந்நாளும் அவருக்கு துணையாய் இருப்பார் என்பதைத்தான் இந்த திருப்பாடல், நமக்கு...

என் கை எப்போதும் அவனோடு இருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 20 – 21, 24 & 26 ”என் கை எப்போதும் அவனோடு இருக்கும்” ”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப்...