அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல் 100: 1 – 2, 3, 5 ”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! திருப்பாடல் 100 சமய வழிபாடுகளில் அடிக்கடி தியானிக்கப்படக்கூடிய ஒரு பாடல். யூதர்கள் எப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினார்களோ, அப்போதெல்லாம் இந்த பாடலையும் பாடி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த பாடல் கடவுளின் மகிமையை, மகத்துவத்தை, இனிமையை, சுவையை எடுத்துரைக்கக்கூடிய பாடல். அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அனைத்துலகோரே என்று சொல்கிறபோது, அது இஸ்ரயேல் மக்களை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அந்த புகழ்ச்சி சாதாரண புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. அது ஓர் ஆர்ப்பரிப்பாக இருக்க வேண்டும். ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள் என்றால் என்ன? திருப்பாடல் 98 சொல்கிறது: யாழினை மீட்டி வாழ்த்துங்கள். இனிய குரலில் வாழ்த்துங்கள். எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். ஆர்ப்பரிப்பு என்பது...