கடவுளே அனைத்து உலகின் வேந்தர்
திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6 ”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்” கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய...