Tagged: தேவ செய்தி

தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியின் இயல்பைப் பற்றி நமக்கு எடுததுரைக்கின்றார். இறையாட்சி எப்படி வளர்கின்றது? மனித முயற்சிக்கு அங்கு இடமுண்டா? இயேசு கூறுகிறார்: “நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறையத் தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது”. ஆம், இறையாட்சி இத்தகைய விதைக்கு ஒப்பானது. இறைவனே விதைக்கிறார், இறையாட்சி தானாகவே வளர்கிறது, இறுதியில் இறைவனே இறையாட்சியை நிறைவுசெய்வார். அப்படியானால், நமது பங்கு என்ன? நமக்கு இறையாட்சிப் பணி என்று எதுவுமே இல்லையா? நமது பணிகளெல்லாம் வீணா? இல்லை, நமது பணிகள் அவசியம் தேவை. இருப்பினும், நமது சொந்த முயற்சியினால், உழைப்பினால் இறையாட்சி மலரப்போவதில்லை. இறைவனின் அருளே அதை நடைபெறச் செய்கிறது. “ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்,...

கறைபடாத வாழ்வு வாழ்வோம்

தன் சகோதரரையோ, சகோதரியையோ ”அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். எரிநரகம் என்பதன் பொருள் என்ன? யூதர்களுக்கு மத்தியில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இது யெருசலேமின் தென்மேற்கில் இருக்கக்கூடிய, பென் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இங்குதான் ஆகாஸ் மன்னன் பாகால் தெய்வங்களுக்கு வார்ப்புச்சிலைகளைச் செய்தான். இந்த பள்ளத்தாக்கில், அந்த தெய்வங்களுக்கு தூபம் காட்டினான். ஆண்டவர் முன்னிலையில் அருவருக்கத்தக்கவகையில், தனது புதல்வர்களையே தீயிலிட்டு எரித்தான். (2குறிப்பேடு 28: 1 – 4) ஆகாசிற்கு பிறகு வந்த, யோசியா அரசர் இதை அடியோடு அழித்தார். பாகால் தெய்வமான மோலேக்கு சிலைக்கு யாரும் தங்கள் புதல்வர்களை பலியிடாதவாறு, அதை அப்புறப்படுத்தினான். அனைத்தையும் தகர்த்தெறிந்தார். பீடங்களை உடைத்து, மனித எலும்புகளால் நிரப்பினார். இவ்வாறாக, அந்த இடமே மாசுபட்ட இடமாக, மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக, அருவருக்கத்தக்க இடமாக மாற்றப்பட்டது. (2 அரசர்கள் 23: 10 முதல்). இந்த இடம் அணையாத...

இறைவாக்கினர் எலியா கொண்டிருந்த விசுவாசம்

இறைவன் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரைப் பற்றிய இன்றைய வாசகம் நமக்கு எடுத்தியம்புகிறது. அவர் தான் இறைவாக்கினர் எலியா. யார் உண்மையான இறைவன்? இது தான், போட்டிக்கான கேள்வி. ஆண்டவரா? அல்லது பாகாலா? இறைவன் எவ்வளவோ நன்மைகளையும், வல்ல செயல்களையும் செய்தாலும்,ஒரு கட்டத்தில் மக்கள், இறைவனை மறந்து போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிச்சயம், இந்த நிலை எலியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வருந்தி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களை விசுவாசத்திற்கு மீண்டும் அழைத்து வர வேண்டியது அவருடைய கடமை என்பதை உணர்கிறார். அதற்காக, எத்தகைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். அங்கு நடந்த நிகழ்வில், ஆண்டவர் தான் உண்மையானவர் என்பது உணர்த்தப்படுகிறது. தன்னுடைய வேண்டுதல் கேட்கப்படுமா? இறைவன் பலியை ஏற்றுக்கொள்வாரா? என்றெல்லாம், எலியா சந்தேகம் கொள்ளவில்லை. அதைப்பற்றிய எள்ளளவும் கவலையும் இல்லை. தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய மன்றாட்டுக்கு இறைவன் செவிமடுப்பார் என்று உறுதியாக நம்புகிறார். தான்...

உப்பாக .. ஒளியாக.

உப்பு, உவர்ப்பு தன்மையும்; ஒளி, ஒளிர்விக்கும் தன்மையும் கொண்டது. தன்னுடைய குணத்தை செயல்படுத்துவதில் உப்பும் ஒளியும் ஒன்றுக்கொன்று ஈடு இணையானது. உப்பு, இருந்த இடத்தில் இருந்துகொண்டு, அது எவ்வளவு கடினமான இடமாக இருந்தாலும் தன்னைக் கரைத்து கசியவைத்து, தன் உவர்ப்புத் தன்மையை உட்புகுத்திவிடும். அதுபோல ஒளியும் தன் ஒளிக் கதிரை ஊடகங்கள் வழியாக ஒளி ஊடுறுவல்,ஒளி விலகல், ஒளி முறிவு, ஒளிச் சிதரல், ஒளி பிரதிபலித்தல் இப்படி எப்படியாவது தன் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் உப்பு, நீங்கள் ஒளி. உங்கள் தாக்கத்தை நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்துங்கள். உப்பைப்போல ஒளியைப்போல தன் நிலையில் திருப்தியடைய வேண்டும். ஆகா நான் உவர்ப்பாக அல்லவா இருக்கிறேன்; அடடா நான் வெப்பமாக அல்லவா இருக்கிறேன் என்று விரக்தியோ வேதனையோ அடையக் கூடாது. பாகற்காய் கசப்பாக இருப்பதில்தான் அதன் பெருமை. மாம்பழம் இனிப்பாக இருப்பதுதான் அதற்குச் சிறப்பு. இருப்பதில் திருப்தியடைந்து, நம்மிடம் இருக்கும் நம் தன்மையை எல்லோருக்கும்...

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணி 11: 21 – 26, 13: 1 – 3 ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகமாயின. திருத்தூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளுக்கு தப்பியோடினர் (8: 1). ஆங்காங்கு சிதறுண்டவர்கள் அமைதியாக இல்லை. மாறாக, தாங்கள் சென்ற இடங்களிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர்(8: 4). குறிப்பாக, பிலிப் அன்னகர் ஒருவருக்கு நற்செய்தியை விளக்கிக்கூறுவதைப் பார்க்கிறோம்(8: 5 – 40). சவுலின் மனமாற்றம்(9ம்அதிகாரம்) மற்றும் புறவினத்து மக்களுக்கான பேதுருவின் நற்செய்திக்குப்பிறகு(10ம் அதிகாரம்), மீண்டும் எருசலேம் நோக்கி அனைவருடைய பார்வையும் திரும்புகிறது. எருசலேமில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கு, புறவினத்து மக்களுக்கான தன்னுடைய நற்செய்தியையும், அவர்களின் மனமாற்றத்தையும் எடுத்துரைக்கிறார்(11: 18). ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். (11: 19). அவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அவர்களது நற்செய்தியின் பொருட்டு, பெருந்தொகையான...