Tagged: தேவ செய்தி

இயேசுவின் இதயத்தில் இடம் பிடியுங்கள்…

லூக்கா 7:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் கடவுளின் செல்லப்பிள்ளைகளாக வாழ வேண்டும், அவருக்கு உகந்தததைச் செய்ய வேண்டும், மிகவும் குறிப்பாக அவரின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆசை, ஆவல் அனைத்தும் இந்த அருமையான நாளில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நிறைவுக்கு வருகிறது. என்ன செய்தால் அந்த ஆசைகள் நமக்கு நிறைவுபெறும்? 1. நூறு சதவிகித நம்பிக்கை இன்றைய நற்செய்தியில் வருகின்ற நூற்றுவர் தலைவர் என்றாலே நூறு சதவிகித நம்பிக்கை கொண்டவர் என நாம் சொல்லி விடலாம். இயேசுவின் மீது ஆழமான, அடர்த்தியான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதுதான் இயேசுவின் இதயத்தில்...

துளைத்த வாள்கள் மிரண்டு போனது…

வியாகுல அன்னையின் திருவிழா யோவான் 19:25-27 இறையேசுவில் இனியவா்களே! வியாகுல மாதா திருவிழா திருப்பலியில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் பங்கெடுக்க வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம், வியாகுலத் தாயிடமும் மன்றாடுகிறேன். பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார். அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும், மக்களைப் பாவம், தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர் . அவர்களது வாழ்வு ஊழியக்காரியாகிய மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர் ” என்ற பெயரையே அவர்கள் முழுவிருப்பத்துடன் தமதாக்கிக் கொண்டனர். இவ்வாறு துவங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் திருத்தந்தை 7ஆம் பத்திநாதர், நாடு...

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

கட்டாயக் கல்வி: திரும்ப கிடைக்காது

லூக்கா 6:27-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் அனைத்தையும் செய்கிறோம். நாம் செய்கிற உதவி, நாம் காட்டுகிற அன்பு என அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் செய்கிறோம். திரும்ப கிடைக்காது என்று தெரிந்தால் நாம் திரும்ப திரும்ப பல முறை யோசிப்போம். அப்படி யோசிக்கும் நமக்கு மிகச் சிறந்த கட்டாயக் கல்வியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த கட்டாயக் கல்வி என்னவென்றால் நாம் செய்வது திரும்ப கிடைக்காது என்பதை புரிந்துக்கொள்வது தான். 1. செய்ததை மறந்து விடு பிறருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்வது பெருந்தன்மை. செய்த உதவிக்கு...

பட்டியலைப் பார்த்தீர்களா?

லூக்கா 6:20-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசக்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பட்டியலை வெளியிடுகிறார். என்ன அந்த பட்டியல்? அதுதான் பேற்பெற்றோர் யார் என்பதும் கேடுற்றோர் யார் என்பதும் ஆகும். நமக்கு அந்த பட்டியலில் எந்த இடம் என்பதை கவனமாய் கண்டுபிடிக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கின்றது. 1. பரிசு வரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மலைப்பொழிவில் பேறுபெற்றோருக்கான பரிசுகளை வழங்குகிறார். ஏழைகளுக்கு விண்ணரசு என்ற பரிசு கிடைக்கும். பட்டினியாய் இருப்போருக்கு பசி தீா்ந்து நிறைவு என்ற பரிசு கிடைக்கும். அழுது கொண்டிருப்போர் சிரிப்பு என்ற பரிசை பெறுவர் என ஆண்டவர் இயேசு பேறுபெற்றோருக்கான பரிசுகளை அறிவித்துக்கொண்டே சொல்கிறார். 2....