எருசலேம் போல எழும்பாதே!
லூக்கா 19:41-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுள் தேடி வருவதை மனிதர்கள் கண்டுகொள்வதில்லை. பல நேரங்களில் பலவிதமான அனுபவங்கள், மனிதர்கள் வழியாக கடவுள் நம்மை தேடி வருகிறார். பலவிதமான வேலைகளை செய்யும் நாம் கடவுள் தேடி வருவதை அவ்வளவு ஆர்வமாக கவனிப்பதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் குரலைக் கேட்காத எருசலேம் நகரைக் குறித்து நம் ஆண்டவர் இயேசு அழுததை பற்றி சொல்கிறது. ஏன் இயேசு அழுதார்? இயேசு அங்கு போதித்த போதனைகள் அனைத்தும் வெறுமையாய் போனது. ஆண்டவர் தேடி வந்ததை அவர்கள் உணரவில்லை. அமைதிக்கான, அன்பிற்கான வழியில் பயணிக்கவில்லை. ஆகவே இயேசு எருசலேமை நெருங்கி வந்ததும் அழுகிறார். நாம் எருசலேம் போல எழும்ப கூடாது....