Tagged: தேவ செய்தி

புகழ்ச்சியும் தற்பெருமையும்

நம்மைப்பற்றி நாமே புகழ்வது தற்பெருமை. அடுத்தவர் நம்மைப்பார்த்து வியந்து பேசுவதுதான் புகழ்ச்சி. இந்த தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரியாமல், வாழ்வையே இழந்தவர்கள் தான் பரிசேயர்கள். பரிசேயர்கள் தாங்கள் செய்வது சரி என்று நினைத்தார்கள். அது தவறு இல்லை. ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், தாங்கள் செய்வது மட்டும் தான் சரியென்று நினைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இதனைத்தான் இயேசு நேரடியாகக் கண்டிக்கிறார். இயேசு எப்போதுமே தன்னைப்பற்றி உயர்வாகப் பேசியதில்லை. ஆனால், மக்கள் அவரை உயர்வாகப் பேசினார்கள். பரிசேயர்கள் எப்போதுமே தங்களை உயர்வாகவே எண்ணினார்கள். ஆனால், மக்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இது அவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனாலும், தங்களது அதிகாரத்தினால், மக்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் நினைத்ததைச் சாதித்தனர். இப்படிப்பட்ட தற்புகழ்ச்சியை இயேசு கடுமையாக எதிர்க்கிறார். இன்றைக்கு புகழ்ச்சி என்பது நமது வாழ்வைப்பார்த்து, மக்கள் நமக்குக் கொடுக்கக்கூடிய அடையாளம். அதனை நாமே கேட்டுப்பெற முடியாது. நாம் வாழக்கூடிய வாழ்வைப்பார்த்து, அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும்....

இணைந்து செல்லும் கட்டளை

மாற் 12:28-34 திருச்சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். இவர்களைத் தலைமையின்று சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து வலியுறுத்தியவர்களில் மறைநூல் அறிஞர்களின் பங்கும் மிகப் பெரியது. ஆனால் இயேசுவின் போதனையின் ஆழத்தை உணர்ந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் அவரை அணுகி சிறந்த கட்டளை ஏது? எனக் கேட்கின்றார். ஒரு கேள்விக்கு இரு பதில்கள் கூறப்பட்டது போலத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இறையன்பு இல்லாமல் பிறரன்பு இல்லை. பிறரன்பு இல்லாமல் இறையன்பு இல்லை. இந்த இரண்டுக் கட்டளையும் ஒன்றை விட்டு மற்றொன்று முழு அர்த்தம் பெற இயலாது. கடவுளை முழு மனத்தோடு நேசிக்கும் எவரும் கடவுளின் சாயலான (தொ.நூல் 1:27) மனித இனத்தை அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வெளிப்படுத்துவது மக்களிடையே தான். எனவேதான் கடவுள் தனது ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்புகிறார். (யோவான் 3:16) அதே யோவான் தனது திருமுகத்தில் கடவுளிடம்...

இரட்டை நிலைப்பாட்டைக் களைய

லூக் 11 : 14-23 இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. “உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா” என்ற நகைச்சுவை. இது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் நம்மை அழைக்கிறது. இதில் சிந்திக்க என்ன இருக்கிறதென்றால் நம்முடைய இரட்டை வேடம். இந்த வேடத்தை தேவைக்கு ஏற்றவாறு போட்டுக் கொள்கிறோம். தேவையில்லை என்றால் நாம் கழற்றி எறிந்து விடுகிறோம். இதனையே இன்றைய நற்செய்தியில் நம்மால் காணமுடிகிறது. பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீர் பேய்களின் தலைவரைக் கொண்டே பேய் ஓட்டுகிறீர்’ என்கிறார்கள். ஆனால் அவர்களைச் சார்ந்தவர்கள் செய்கின்ற வல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் வல்லமையால் நடக்கிறது என்கிறார்கள். இதைத்தான் பலநேரங்களில் பரிசேயத்தனம் என்போம். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் களையவே இன்றைய நற்செய்தியும் தவக்காலமும் நம்மை அழைக்கிறது. சில இரட்டை நிலைகள் : நான் எதையாவது சாதித்தால் அது என்னுடைய திறமையினால் என்கிறேன். அதையே மற்றவர்கள் சாதித்தால் ஏதோ அதிர்ஷ்டத்தால்...

முழுமையை நோக்கி…

மத் 5: 17-19 திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே....

ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்

திருப்பாடல் 25: 4 – 5b, 6 – 7bc, 8 – 9 ”ஆண்டவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்” கடவுள் எப்படிப்பட்டவர்? என்பது பற்றி யூதர்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். கடவுளை நீதிபதியாக, தண்டிக்கிறவராக, கடுமையானவராக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். பாவம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையைப் பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்த யூதர்கள், கடவுளின் மற்றொரு பக்கத்தை சரியாக கணிக்கத் தவறிவிட்டனர் என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய பார்வையின் மறுபக்கத்தை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பாவிகளுக்கு நல்வழி காட்டுகிறவராக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் பாவிகள் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பவரல்ல, மாறாக, அவர்கள் திருந்தி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறவர். நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், அந்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறபோது, மன்னிப்பும் உண்டு என்பதை, இந்த வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆக, பாவம் என்பதற்கு மாற்றாக,...