தந்தையும், மகனும்
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என்கிற இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஒன்றாய்“ என்பதன் பொருள் என்ன? நமது அடிப்படை மறைக்கல்வி, கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் எனவும், ஆனால் ஒரே கடவுள் எனவும் கற்றுத்தந்திருக்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கிறபோDaily manna, இன்றைய சிந்தனை, தேவ செய்திது, மூன்று பேருக்கும் ஒரே ஆற்றல், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பது என்று சொல்லப்படுகிறது. இதனை அடியொற்றி நாம் சிந்திக்கிறபோது, இயேசு தந்தையாகிய கடவுளின் இதயத்தோடு இணைந்தவராய் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். என்னைப் பார்க்கிறவர், தந்தையையே பார்க்கிறார் என்று இயேசு சொல்வதன் பிண்ணனியும் இதுதான். தந்தையாகிய கடவுளைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் இயேசுவைப் பார்த்தாலே போதும். ஏனெனில், இயேசு கடவுளின் பண்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். இயேசு பாவிகளை பெருந்தன்மையோடு மன்னிக்கிறபோது, கடவுளின் மன்னிப்பை நாம் பார்க்கலாம். இயேசு நற்செய்தி அறிவிக்கிறபோது, கடவுளின் வார்த்தையை நாம் கேட்கலாம்....