Tagged: தேவ செய்தி

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 6 – 7 எல்லா திருப்பாடல்களிலும் இறைவனைப் போற்றுவதும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? இறைவனுக்கு நாம் ஒவ்வொருநாளும் நன்றி சொல்ல வேண்டுமா? இறைவனுக்கு நமது உள்ளம் தெரியாதா? இறைவனை எதற்காக நாம் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் பல நாட்கள் எனக்குள்ளாக எழுந்திருக்கின்றன. சற்று ஆழமாகச் சிந்தித்தபோது, எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை உணர முடிந்தது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற அந்த நிகழ்வுகளை, பாஸ்கா விழா எடுத்துக் கொண்டாடி, அந்த நாளில் குடும்பத் தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு, கடவுள் கொடுத்த அந்த விடுதலையின் நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் சொல்ல வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்தார். அதற்கான காரணம், கடவுள் செய்த நன்மைகளை நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறபோது,...

எளியேன், சிறுமைப்பட்டவன்

திருப்பாடல் 69: 2, 13, 29 – 30, 32 – 33 இயற்கையின் அழிவுக்கு நடுவில் இருப்பது போல் உணர்வதாக திருப்பாடல் ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். ஆழமான நீர்த்திரள், நிலைகொள்ளாத நீர், வெள்ளம் போன்ற உருவகங்கள், அவர் துயரங்களுக்கு மத்தியில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவருடைய இதயம் நொறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவருடைய மனம் புண்பட்ட நிலையில் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சவுலின் எதிர்ப்பு, உடனிருந்தவர்களின் துரோகம், உயிரைப்பற்றிய பயம் போன்றவை அவருக்கு இந்த கலக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது என்ன? கடவுளின் பாதுகாப்பு. இந்த உலகத்தில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ, அவர்கள் கைவிட்ட நிலையில், கடவுளிடம் அவர் பாதுகாப்பை உணர்கிறார். அந்த பாதுகாப்பின் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்கிறார். இந்த புகழ்ச்சி வெறும் உதட்டளவில் வந்த புகழ்ச்சி அல்ல. மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற புகழ்ச்சி. கடவுளின் உண்மையான அன்பை...

ஆண்டவரின் பெயரே நமக்குத்துணை

திருப்பாடல் 124: 1 – 3, 4 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கச் செய்கிற திருப்பாடல். நம்முடைய வாழ்வில், நமக்கு ஏணியாக இருந்து உயர்த்திவிட்ட மனிதர்களை நாம் மறக்கிறவர்களாக இருக்கிறோம். உயரத்திற்குச் சென்றவுடன், நம்மை ஏற்றி விட்டவர் நம் நினைவிலிருந்து அகன்று போய் விடுகிறார். அவரை நாம் ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் இல்லையென்றால், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பது, நமது அறிவிற்கு எப்போதுமே எட்டாது. இந்த நிலை தான் திருப்பாடலிலும் வெளிப்படுகிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா? இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என்கிற கேள்விகளை, திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். ஒருவேளை ஆண்டவர் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களை எதிரிநாட்டவர் அழித்தொழித்திருப்பார்கள். அவர்கள் இன்னும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். யாரும் அவர்களை எதுவும் செய்துவிட முடியும் என்கிற நிலையில்...

ஆண்டவர் தம் செயல்களை மக்கள் அறியச்செய்யுங்கள்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7 இன்றைய திருப்பாடல், கிறிஸ்தவனின் முக்கியமான கடமையை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதுதான் ”அறியச்செய்வது”. “அறியச்செய்வது“ என்றால் என்ன? நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அறிவிப்பது, தெரியப்படுத்துவது. எதனை அறியச்செய்ய வேண்டும்? என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இறைவன் செய்திருக்கிற இரக்கச்செயல்களை, அற்புதங்களை, வல்ல செயல்களை மற்றவர்கள் அறியச்செய்யுங்கள் என்பது, ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? கடவுளை அறிந்தவர்கள் அனைவருமே இந்த நற்செய்திப்பணியில் ஈடுபட அழைப்புவிடுக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நாம் வாழும் உலகில், மக்களின் அறிவை மழுங்கடிப்பதிலும், மக்கள் எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும் நம்மை ஆளக்கூடியவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைகிறபோது, அதனை திசை திருப்ப, மக்களின் நாட்டுப்பற்றை தங்களுக்குச் சாதகமாக்கி, பிரச்சனையை திசைதிருப்பி விடுகிறார்கள். தங்களது பாக்கெட்டை நிரப்புவதற்காக, மக்களை காவு கொடுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு...

உன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார்

திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40 கடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி...