தூய சவேரியார் திருவிழா
புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம்...