Tagged: தேவ செய்தி

இயேசுவின் விழுமியங்களும், மதிப்பீடுகளும்

இயேசு பாலைவன அனுபவத்திற்கு பிறகு முதன்முதலாக தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். அவர் தொடங்கிய முதல் பகுதி கலிலேயா. அவர் போதித்த முதல் இடம் தொழுகைக்கூடம். இதனுடைய முக்கியத்துவத்தை இப்போது பார்ப்போம். அவர் தொடங்கக்கூடிய இடம் அவர் வாழ்ந்த கலிலேயா. கலிலேயா ஒரு வளமையான பகுதி. கலிலேயாவில் மக்கள் ஏராளமானபேர் வாழ்ந்தனர். மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக இது விளங்கியது. முற்போக்குச் சிந்தனையும், புதுமையை வரவேற்கக்கூடியவர்களாகவும் இங்குள்ள மக்கள் வாழ்ந்தனர். வீரத்திலும், துணிவிலும் வலிமை உள்ளவர்களாக வாழ்ந்தனர். எதற்கும் அஞ்சாத உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் கலிலேயர்கள். இயேசு தொழுகைக்கூடத்தில் தனது போதனையை ஆரம்பிக்கிறார். யூதர்களின் வழிபாட்டின மையப்பகுதியாக தொழுகைக்கூடம் ஆக்கிரமித்திருந்தது. தொழுகைக்கூடத்தில் செபமும், இறைவார்த்தையும் மையமாக விளங்கின. தொழுகைக்கூடத்திலிருக்கிற ஏழுபேர் இறைவார்த்தையை வாசித்தனர். பொதுவாக, முதலில் எபிரேய மொழியில் வாசிக்கப்பட்டது. பெரும்பாலும் எபிரேய மொழி அவர்களுக்கு புரியாததால், அதனுடைய மொழிபெயர்ப்பான அரேமிய நூலும் அல்லது கிரேக்க நூலும் வாசிக்கப்பட்டது. திருச்சட்ட நூலிலிருந்து வாசகம்...

செபத்தின் வல்லமை

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை. 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால்...

உணவை வீணாக்க வேண்டாம்

நற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும். மீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது? என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்....

மக்களுக்காக வாழ்ந்திட…

இன்றைய நற்செய்தியில் புதுமைகளோ, அருங்குறிகளோ, போதனையோ காணப்படவில்லை என்றாலும், இந்த பகுதி ஒரு மிகமுக்கியமான பகுதியாக காணப்படுகிறது. ஏனென்றால், வரலாற்றை மாற்றக்கூடிய நிகழ்வுகள் இந்த பகுதியில்தான் நாம் பார்க்கிறோம். முதலில் திருமுழுக்கு யோவானைப்பற்றிய செய்தி. திருமுழுக்கு யோவானுக்கு அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அப்படி அவர் எண்ணியதும் சுயநலத்திற்காக கிடையாது, பொதுநலத்திற்காகவே. தன்னுடைய பணி மெசியாவிற்காக மக்களை ஆயத்தப்படுத்துகின்ற பணி. ஆனால், இன்னும் மெசியா தன்னுடைய பணியை ஆரம்பித்ததாக தெரியவில்லை. அதற்குள்ளாக தான் கைது செய்யப்பட்டுவிட்டோம். ஒருவேளை நாம் அவரசரப்பட்டு விட்டோமோ என்று, நிச்சயம் திருமுழுக்கு யோவான் நினைத்திருக்கக்கூடும். ஆனால், அவருடைய சிறைவாசம் தான், மெசியா வருகைக்கான தொடக்கம் என்பது அவர் அறியாத ஒன்று. திருமுழுக்கு யோவானுக்கு அடுத்தபடியாக இயேசுவைப்பற்றிய செய்தியும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். இயேசு தனது சொந்த ஊரான நாசரேத்தை விட்டு அகன்று, கப்பர்நாகுமுக்குச்...

மூவரசர் திருவிழா

திருக்காட்சிப் பெருவிழா திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின்...