Tagged: தேவ செய்தி

ஆண்டவரே என் ஒளி! என் மீட்பு

திருப்பாடல் 27: 1- 4, 13 – 14 இஸ்ரயேல் மக்கள் தங்களது வாழ்க்கையில் கடவுளை மையமாகக் கொண்டிருந்தனர். ஆண்டவர் தான் அவர்களது வாழ்வில் ஒருவராக கலந்திருந்தார். ஆனாலும், அவர்கள் செய்த தவறு, அவர்களுக்கு பல சோதனைகளையும், தண்டனைகளையும் கொடுத்தது. பகை நாட்டினரிடத்தில் போரில் தோற்றுப்போயினர். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். வேற்றுநாட்டில் பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகினர். இப்படி துன்பங்களை அனுபவிக்கிற நேரம் தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார். அவரது வரிகள், நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இப்போது இருக்கிற நிலைமாறி, அனைவரும் ஆண்டவர் அருளக்கூடிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, உரக்கச் சொல்கிறது. அவர்கள் வேற்றுத்தெய்வங்களையும், மனிதர்களையும் நம்பியதால் தான், இந்த இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் மட்டும் தான், அவர்களின் மீட்பாக இருக்கிறார். அவர் தான் ஒளியாக இருந்து, இருளில் வழிநடத்துகிறார். எனவே, இப்படிப்பட்ட இழிநிலை மாற வேண்டும் என்ற, நம்பிக்கையோடு இருக்க, திருப்பாடல்...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

உண்மையான சீடர்கள்

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள். அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்? இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர். அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள். ஏனென்றால், இயேசு பாரம்பரியம்...

மக்களுக்காக வாழ்ந்த இயேசு

கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான். ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால்,...

இயேசுவின் பார்வையில் புனிதம்

புனிதம் என்ற பெயரில் மனிதத் தேவையை பொருட்படுத்தாது விடுவது, அந்த புனிதத்தை மாசுபடுத்துகின்ற செயல் என்பதை, இன்றைய நிகழ்ச்சி மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. புனித பொருட்களை மற்றவர்களின் தேவைக்கு பயன்படுத்துவது தான், அந்த புனிதப்பொருட்களுக்கான உண்மையான விலை. இன்றைய நாளில் ஓய்வுநாளில் பசியாயிருந்த சீடர்கள் கதிர்களைப் பறித்து உண்கிறார்கள். பரிசேயர்கள், ஓய்வுநாளை மீறிய செயலாகப் பார்க்கிறார்கள். அதனைக் கண்டிக்கிறார்கள். குற்றம் காண துடிக்கிறார்கள். ஆனால், இயேசு புனிதம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு எடுத்துரைக்கிறார். பொதுவாக, குழந்தைகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டனர். காரணம், ஆலயங்களும், அதனைச்சார்ந்த இடங்களும் பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பறைசாற்றுவதாக நினைத்தனர். அங்கே குழந்தைகள் அதன் புனிதத்தன்மையை கெடுத்துவிடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். எனவே, அவர்கள் தடைசெய்யப்பட்டனர். ஆனால், புனித நாளோ, புனித பொருட்களோ மனிதத்தேவையை நிறைவு செய்கிறபோதுதான், புனிதத்தன்மையைப் பெறுகிறது. பலிக்கு வைக்கப்படுகிற அப்பம், பசியாயிருக்கிறவனுக்குக் கொடுக்கப்பட்டால், அதுதான் உண்மையான பலி....