Tagged: தேவ செய்தி

அவரின் மனநிலை

யோவான் 18: 1- 19 : 42 எத்தனையோ மக்கள் தம் உயிரைப் பிறர்க்கெனக் கொடுத்துள்ளார்கள். எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் தனது நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் எவரது இரத்தமும் பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. பலருக்காக ஒருவர் இறந்த சரித்திரம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரத்தமே “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:29). நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5:9). விலை மதிக்கப்படாத இரத்தம் (1பேதுரு 1:19). கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இவ்விரத்தமே நம்மை மீட்கும் இரத்தம். இந்த இரத்தம்தான் நம் அடிமைத்தனத்தை மாற்றி எழுதியது. இப்படி இயேசு மக்கள் அனைவரையும் கடவுளுக்கு முன்பாக தனது சிலுவையின் மூலமாகக் கூட்டிச் சேர்த்தார். அவருக்கு முன் நிற்கத் தகுதியுள்ளவர்களைத் தரம் உயர்த்தினார். அநியாயக் குற்றம் சுமத்தி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின்...

முன் மாதிரி

(யோவான் 13 : 1-15) பாஸ்கா திருவிழா இஸ்ரயேலரின் பெரும் விழா. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து செங்கடலைக் கடந்து உரிமைப் பேறு பெற்றவர்களாய் மாறியதை நினைத்துக் கொண்டாடுகின்ற ஒரு பெருவிழா. பாஸ்கா விழா தொடங்க இருந்த நாளில் இயேசு நற்கருணையை உண்டாக்கியது அவர் நமக்களித்த விடுதலையையும், உரிமைப் பேற்றையும் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரயேலர் அனைவரும் எகிப்திலிருந்து மீட்கப்பட்டு விடுதலைப் பெற்றதற்காக, அவர்கள் இவ்விழாவினை நன்றியின் விழாவாகவும் நினைவு கூர்கிறார்கள். நாம் கொண்டாடுகின்ற நற்கருணைப் பலியும் நன்றியின் பலியே. நற்கருணை என்ற சொல்லுக்கே ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு நன்றி என்பதே பொருள். என் உடல், என் இரத்தம் நற்கருணையே நமது வாழ்வின் மையம், ஊற்று. நற்கருணை இல்லாமல் திருஅவை இல்லை. குருத்துவமில்லாமல் நற்கருணை இல்லை. இந்த மூன்றும் இல்லாமல் கிறித்தவம் இல்லை. இன்று பல சபைகள் நற்கருணை இல்லாமலே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடக்கக் கிறித்தவர்களை ஒன்றிணைத்ததே இந்த நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே அனைத்தும்...

பணப்பற்றா? குருப்பற்றா?

(மத்தேயு 26 : 14-25) இந்த புனித வாரம் முழுவதும் இயேசுவின் தற்கையளிப்பையும் அதனைச் சுற்றி நடந்த அனைத்தையும் பற்றியே சிந்தித்து, நம் வாழ்க்கையை அதனோடு ஒன்றித்து உரசிப்பார்க்க அழைப்புக் கொடுக்கிறது நமது தாய்த்திருச்சபை. ‘செம்மறியாம் கிறித்துவின் இரத்தம் விலைமதிக்கப்படாதது’ என்கிறார் பேதுரு (1பேதுரு : 1-19) அப்படிப்பட்ட இறையவனைக் காட்டிக் கொடுக்கப் பேரம் பேசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அவரோடு இணைந்தே பந்தியில் அமர்கின்றான் யூதாஸ். துரோகியை அரவணைப்பதிலும் இயேசு நமக்கு முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார். அவன் பேரம் பேசியது வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்கே. இது சாதாரண ஓர் அடிமையின் விலையாகக் கருதப்பட்டது. (செக் 11:12, விப 21:32) கடவுள் நிலையிலிருந்த அவர் நம்மை மீட்க மனிதனாக, நம்மில் ஒருவராகப் பிறந்தார். இறக்கும் பொழுதோ அடிமை நிலைக்கு தன்னைத் தாழ்த்தித் தன்னுயிரை நமக்குக் கையளித்தார். பணப்பற்று அவனது குருப்பற்றைக் கொன்றுவிட்டது. பண ஆசையால் கவரப்பட்டவன் அதிலே தன்னை மூழ்கடித்து...

உங்களில் ஒருவன்…!

(யோவான் 13 : 21-33,36-38) ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இந்த இறைவார்த்தை இன்றுவரை நமது திரு அவையில், பங்குதளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது. காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் யூதாசுகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இன்றுவரை யூதாசைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு. இவற்றை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இன்றைய நற்செய்திக்கும், லூக்கா நற்செய்தியாளரின் ஊதாரி மகன் உவமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். எவ்வாறு இளையமகன் சொத்துக்களை (இறைவனின் அருள்) பெற்றுக் கொண்டு நெடுந்தொலைவு சென்றானோ (இறைவனை விட்டு வெகு...

ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு

திருப்பாடல் 27: 1, 2, 3, 13 – 14 சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார். அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே அவருக்கு எதிராக நிற்பது போலத்தான் தாவீது பயந்துபோயிருப்பார்....