மக்களுக்கான இறைப்பணி
கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள், கொடையாகவே வழங்குங்கள் என்று நம் ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் மொழிகிறார். இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகிறார்? என்ன நோக்கத்திற்காக அனுப்புகிறார்? மக்களுக்கு கடவுளின் ஆசீரும், அருளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுப்புகிறார். இங்கே, இரண்டு செய்திகளை நாம் பெற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசவில்லை. தங்களைப்பற்றி உயர்வாக எண்ணவில்லை. மற்றவர்களின் வாழ்வைக் கெடுத்து, குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பிரசன்னம் மற்றவர்களுக்கு கடவுளின் இருப்பை உணர்த்துவதாக இருக்கிறது. அவர்கள் கடவுளின் அன்பை, தங்களின் செயல்கள் வழியாக உரக்கச்சொல்கிறவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவதாக, சீடர்கள் கடவுளின் அருளை மக்களுக்கு, குறிப்பாக தேவையில் இருக்கிறவர்களுக்கு பெற்றுத்தரும் வாய்க்காலாக இருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றுத்தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். கடவுளின் மன்னிப்பையும், இரக்கத்தையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துச்செல்லும், இறைப்பணியை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம் அனைவருமே மற்றவர்களுக்கு...