Tagged: தேவ செய்தி

விருதுவாக்கு விறுவிறுப்பாக்கும்

லூக்கா 4:16-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் வாலிப பருவத்தை அடைந்ததும் நாம் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறோம். நம்முடைய திட்டம் என்ன? குறிக்கோள் எப்படிப்பட்டடது? பணியின் விருதுவாக்கு என்ன? இதுபோன்ற தெளிவுகள் இருந்தால் அவைகள் நம்மை சுறுசுறுப்பாக மாற்றும். நம் பணிகளை விறுவிறுப்பாக்கும். இயேசுவின் தெளிவான விருதுவாக்கோடு தெளிவாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் விருதுவாக்கு: ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் ஏனெனில் விண்ணரசு உங்களுக்கு உரியது என்ற நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கும் விருதுவாக்கு, சிறைப்பட்டோரை விடுதலை செய்து மகிழ்ச்சியை அளிக்கும் விருதுவாக்கு, மக்களின் அகக்கண்களை திறந்து பார்வை அளிக்கும் விருதுவாக்கு, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்மிட்டு அறிவிக்கும் விருதுவாக்கு. இந்த திட்டத்தை ஆண்டவர் நிறைவேற்றிய...

கடவுளே! நீரே என் இறைவன்

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 கடவுளை தன்னுடைய இறைவனாக வடிக்கிறது இந்த திருப்பாடல். பல தெய்வங்கள் வாழ்ந்த சமுதாயத்தில், இறைவனின் இருப்பையும், அவர் மீதான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது இந்த திருப்பாடல். அது சாதாரணமான மனநிலையோடு அல்ல, மாறாக, தீராத பாசம் கொண்ட மனநிலையாக வெளிப்படுத்தப்படுகிறது. இதற்கு அருமையான உருவகம் ஒன்று எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது. நீரின்றி வறண்ட தரிசு நிலத்தோடு இது ஒப்பிடப்படுகிறது. நீரின்றி காணப்படும் நிலம் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக அல்லாமல், வறண்ட நிலமாக காணப்படும். அது நீரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நிலம் நீரோடு அமைந்தால் தான், அது பயன்படும். அல்லது அதற்கு மதிப்பு இல்லை. வறண்ட நிலம் ஒன்றுக்கும் உதவாது என்பதால், அதன் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது. தன்னுடைய மதிப்பை இழந்து விடாமல் இருக்கவும், தன்னால் பயன் இருக்க வேண்டும் என்கிற ஏக்க உணர்வும், நிலத்தை மழைக்காக ஏங்க...

போதாது என்ற மனம் வேண்டும்

மத்தேயு 25:14-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் நான் வளா்ந்துவிட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது. எல்லாருமே வளா்ந்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வளர கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள் கொடுத்த திறமைகளை ஒருவர் பயன்படுத்தும் போது அவர் எப்படி வளருகிறார் எனவும் கடவுளின் நன்மதிப்பை எப்படி பெறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறது. மேலும் கடவுள் கொடுத்த திறமைகளை சரியாக பயன்படுத்தாதவர் எப்படி இன்னுலுகிறார் என்பதையும் சொல்கிறது. இரண்டு பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார். 1. மரியாதை இருக்காது சரியாக திறமைகளை பயன்படுத்தாதவருக்கு மரியாதை என்பது இல்லை. அவர் வீட்டிலும் மதிக்கப்படுவதில்லை, காட்டிலும் மதிக்கப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவா்...

தூக்க மயக்கம் உங்களைத் தின்றுவிடும்

மத்தேயு 25:1-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! வாழ்க்கையை கொண்டாடுங்கள். சந்தோசமாக மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். இந்த வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். யார் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்?. யார் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்?. நல்ல சுறுசுறுப்பாக அனுதின கடமைகளை செய்பவர்கள், கடமைகளை தள்ளிப் போடாமல் கருத்துடன் செய்வர்கள் தான் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். பலருடைய வாழ்க்கை கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டமாகவே ஓடுகிறதே காரணம் என்ன? அதற்கான இரண்டு காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன்னே வைக்கின்றது. 1. ஆர்வமற்றவர்கள் அன்றன்றுள்ள கடமைகளை அன்றே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இன்பமாய் இருப்பதில்லை. அடுத்த நாளைக்கு தள்ளிப்போடுகிறார்கள். அடுத்த நாள் செய்ய முடிவதில்லை. குற்றயுணர்வு வருகிறது. வாழ்வு...

பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

மத்தேயு 24:42-51 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம்முடைய நிலையில் அப்படியே இருக்க யாரும் விரும்புவதில்லை. எல்லாருக்கும் இருக்கும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம் வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இருக்கும் நிலையில், பணியில் ஒரு பதவி உயர்வு கிடைக்குமா என்பது நம் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற உதவியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பதவி உயர்வுக்காக இரண்டு பாடங்களை நாம் படிக்க வேண்டும். படித்து பயிற்சியாக்க வேண்டும் முதல் பாடம்: விழிப்பு முதல் பாடம் மிகவும் முக்கியமானது. விழிப்போடு இருப்பவர்கள் தான் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நாம் இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது, பணியிடத்தில் என்ன நடக்கிறது...