Tagged: தேவ செய்தி

என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6 நறுமணத்தைலம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிற வார்த்தையாக இருக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது நம் ஒவ்வொருவரையும் அவர் நினைவிற்கொண்டிருக்கிறார், அன்பு செய்கிறார், மிகுந்த பாசம் உடையவராய் இருக்கிறார் என்பதனை இதன் விளக்கமாக நாம் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் நறுமணத்தைலம் என்பது ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த திருப்பாடலை தனிப்பட்ட முறையில் நாம் வாசித்து பார்க்கிறபோது, நம் அனைவருக்குமான திருப்பொழிவு பாடலாக இருக்கிறது. நறுமணத்தைலம் ஒருவர் மீது பூசப்படுகிறபோது, அவர் இறைவனுக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றம் பெறுகிறார். அதாவது தனது நலனை விடுத்து, இனி கடவுளின் விருப்பமே, தன் விருப்பம் என்ற குறிக்கோளுடன் வாழ ஆரம்பிக்கிறார். இறைவனின் மந்தையை, அவரது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு மனிதனுக்கான கடமையை, பொறுப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின்...

பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுண்டா?

லூக்கா 11:27-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உண்மையே. தாயும், தந்தையும் தான் நம்மை இத்தரணி காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் தெய்வம். பெற்றோர் நம்மை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக் கற்றுத் தருகின்றனர். மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் நம் அன்னை, தந்தையே. இதற்கான நன்றி கடனை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்ன நன்றிக்கடன்? நம் வாழ்வால், செயலால் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஆண்டவா் இயேசு பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுபோல நீங்களும் பெருமை சேருங்கள் என்ற உற்சாக வார்த்தைகளோடு வருகிறது இன்றைய...

எனக்கு நான் பகைவனா?

லூக்கா 11:15-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அடுத்தவரோடு நட்புறவில் அன்புறவில் வாழ்வதற்கு முன் நம்மோடு நட்புறவில் அன்புறவில் வாழ வேண்டும். நான் என்னோடு நட்புறவில் அன்புறவில் வாழவில்லை என்றால் வளர்ச்சி என்பது இருக்காது. வருத்தம் என்பது வந்து சோ்ந்துக்கொண்டே இருக்கும். நான் எனக்கு பகைவனாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்து வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. அரசு கவிழும் நான் நல்ல பாதையில் நடக்கவில்லை என்றால் என் அரசு கவிழும். இங்கு அரசு என்பது என் வாழ்க்கை. தீமையின் ஆட்சி எனக்குள்ளே நடக்கும் போது என் அரசை சரியாக என்னால் நடத்த முடியாது. ஆகவே நானே எனக்கு பகைவனாக மாறுகிறேன். என்...

விடாமல் விடாப்பிடியாக விரட்டு…

லூக்கா 11:5-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எதையும் பெற வேண்டும் என்றால் தொடங்கிய முயற்சியை விடாமல் விடாப்பிடியாகத் தொடா்ந்து செய்யும் போது தான் வெற்றி என்பது கிடைக்கும். இறைவனிடம் இருந்து நாம் நம்முடைய வரங்களை பெற வேண்டும் என்றாலும் தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக கேட்க வேண்டும். அதுதான் வரங்களை வாரி வழங்குகிறது. ஆகவே இன்றைய நாள் நாம் தொடங்குகிற முயற்சி, செயல் எல்லாம் தொடா்ந்து விடாமல் விறுவிறுப்பாக போகட்டும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். அதை இரண்டு விதத்தில் நாம் ஆர்வமாக செய்யலாம். 1. முடியும் எதையும் செய்ய நம்மால் முடியும் என்ற உயா்ந்த எண்ணம் இருந்தாலே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிகிறது. எதையும் பின்வாங்காமல்...

ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…

லூக்கா 11:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும். 1. காலை சொல்லுங்க… காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக...