Tagged: தேவ செய்தி

சோர்ந்திருப்பவர்களே! – உங்கள் சோகம் மாறும்

மத்தேயு 11:28-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கணக்கெடுப்பு நடத்தி எத்தனை மனிதர்கள் சோர்வில்லாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே நம் கண்களில் தென்படுவார்கள். சோர்வை தவிர்த்து சுறுசுறுப்போடு வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நல்லாலோசனைகளை வழங்குகிறது. அவற்றில் இரண்டு மிக மிக முக்கியமானது. 1. கடவுளை பிடித்தல் கடவுளை நெருங்கி வர வர நம் உள்ளத்தில் பிரகாச ஒளி எரிய ஆரம்பிக்கிறது. அந்த பிரகாச ஒளி நம்மிடம் நெருங்கி வரும் சோர்வை விரட்டுகிறது. நம் உடல் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் செல்கள் வளர்கின்றன. உடல், மனம், ஆன்மா இவையனைத்தும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கின்றன. கடவுளைப் பற்றி பிடிக்கும் போது ஆற்றலும், ஆனந்தமும் அவைகளாகவே...

அன்னையைப் போன்று அவதாரம் எடு!

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார். இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட...

இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!

லூக்கா 5:17-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு. 1. பாவமன்னிப்பு நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த...

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்

திருப்பாடல் 85: 8அஆ – 9, 10 – 11, 12 – 13 இன்றைக்கு எத்தனை பேர் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்? இது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைக்கு நாம் ஒவ்வொருவருமே நம்முடைய குரலை இறைவன் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கிற சிக்கல்கள், சவால்கள், துன்பங்கள் ஆகியவற்றை இறைவன் கேட்க வேண்டும், நம்முடைய குறைகளுக்கு பதில்மொழி தர வேண்டும் என்று மன்றாடுகிறோம். இறைவன் பேசுவதை கேட்பதற்கு முயற்சி செய்வதும் கிடையாது. அதில் நமக்கு ஆர்வமும் கிடையாது. வாழ்க்கையில் துன்பங்கள் வருகிறபோது, நாம் கடவுளிடம் வருகிறோம். நம்முடைய எண்ணங்களை முறையிடுகிறோம். ஆனால், இந்த துன்பங்கள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு, நாம் முயற்சி செய்வதே கிடையாது. அதனை ஒரு பொருட்டாக எண்ணுவதும் கிடையாது. நாம் பேசுவதைத்தான் கடவுள் கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறோம். இன்றைக்கு யாரெல்லாம், கடவுளுடைய குரலுக்கு செவிகொடுத்தார்களோ, அவர்களைத்தான் நாம் புனிதர்கள் என்று போற்றுகிறோம்....

ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6 காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது. ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன...