என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!
திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான். நறுமணப்பலிகளை விட, எரிபலிகளை...