Tagged: தேவ செய்தி

தனிமையில் தன்னிலை உணர… மாற்கு 6:30-34

உடலினை உறுதி செய்ய ஆயிரம் வலிகள் இருக்கின்றன. ஆனால் உள்ளத்தை, ஆன்மாவினை வலிமையாக்க தனிமையினால் மட்டுமே முடியும். தனிமை என்பது தன்னிலே இனிமைக் காண்பது. தனிமையிலே தன்னிலையை உணர்வது. இயேசு இன்றைய நற்செய்தியில் மக்களிடம் பணி செய்துவிட்டு வந்த தன் சீடர்களிடம் தனிமையில் சென்று ஒய்வெடுக்க சொல்கிறார். அந்த ஒய்வு எடுத்தலினை தனிமையாயிருக்க யாருமே இல்லாத ஒரு பாலை வனத்துக்கு சென்று ஒய்வு எடுக்க சொல்கிறார். தனிமையில் மட்டுமே நம்மை நாமே சீர்; தூக்கி பார்க்க முடியும், ஆராய முடியும். உண்மையிலே சொல்ல வேண்டுமென்றால் தனிமை நமக்கு பல விடயங்களை கற்று தருகிறது. இந்த தனிமையில் நாம் ஏறெடுக்கின்ற இந்த உள்ளொளிப் பயணம் துறவறத்துக்கு மட்டுமல்ல. இல்லறத்தை நல்லறமாக்க மிகவும் தேவைப்படுகின்றது. மேலும் இன்றையய நற்செய்தி நல்ல தலைவன் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென்றும் நம் இயேசு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார். சீடர்களைத் நாடி வந்தவர்களை அவர் சந்திக்கிறார். தன்...

ஆண்டவரே என் ஒளி

திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9 ”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு...

வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….

இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல,...

ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே

திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18 ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல்...

படைகளின் ஆண்டவர் இவர்

திருப்பாடல் 24: 7, 8, 9, 10 படைகளின் ஆண்டவர் என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டு நூலில் ஏறக்குறைய 261 முறை வருகிறது. 1சாமுவேல் 1: 3 ல், முதன்முறையாக இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. விண்ணகத்தில் இருக்கிற படைகளுக்கு தலைவராக ஆண்டவர் இருக்கிறார் என்பதுதான் இதனுடைய பொருளாகும். இஸ்ரயேல் மக்களின் படைகளுக்கும் கடவுள் தான் தலைவர் என்பதையும் மறைமுகமாகக் குறிக்கக்கூடிய சொற்களாகவும் இவற்றைப் பார்க்கலாம். தாவீது அரசர், படைகளின் ஆண்டவர் என்று சொல்கிறபோது, இந்த விண்ணகத்திற்கு மட்டுமல்லாது, மண்ணகத்திற்கும், இங்கிருக்கிற படைகளுக்கும் ஆண்டவர் தான் தலைவராக இருக்கிற என்கிற பொருளில், இங்கே எழுதுகிறார். ஆக, கடவுள் தான் அனைத்திற்கும் அதிபதி என்பதை, இந்த வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. படைகளின் தலைவராக இருக்கிறவர் தன்னுடை சேனையை வழிநடத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டும். விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். பாவத்திலிருந்து...