Tagged: தேவ செய்தி

இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும்...

திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20 சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம் தொடக்க கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த...

இறைவனைத் தேடும் உள்ளம்

திருத்தூதர் பணி 8: 26 – 40 பிலிப்பு தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறார். எங்கேயெல்லாம் தூய ஆவி அவரை அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம், அவர் மறுக்காமல் செல்கிறார். அப்படி செல்கிற வழியில், இறைவார்த்தையின் மீது தாகம் கொண்டிருக்கிற ஓர் அரச அலுவலரைப் பார்க்கிறார். அவர் தான் எத்தியோப்பிய நிதியமைச்சர். அவர் எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெளிவாக ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் கூட, ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கிறார். தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு அவருக்கு விளக்கம் கொடுக்கிறார். இந்த பகுதி, இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் உடனிருந்து கற்றுக்கொடுக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. எத்தியோப்பிய அமைச்சருக்கும், பிலிப்புவிற்கும் பழக்கம் கிடையாது. இருவரும் வேறு வேறு இடங்களில் இருக்கிறவர்கள். ஆனால், இருவரும் ஒன்றிணைகிறார்கள். அது இயல்பாகவே அமைந்த நிகழ்ச்சி அல்ல. மாறாக, இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டம். எப்போது நாம் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும், இறைவனை இன்னும்...

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை....

உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்

திருத்தூதர் பணி 7: 51 – 8: 1 ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன? தூய ஆவி இல்லாத நிலை தான், அவர்களின் பழிவாங்கும்...