Tagged: இன்றைய வசனம் தமிழில்
இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இறைவாக்கினர்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களைக்கூட அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், குடும்பப் பின்னணி, வாழும் சூழல் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையையை, செயல்பாட்டைக் கணிக்கின்ற தவறை மானிட சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது என்பதனை இயேசுவின் காலத்திலிருந்து இந்நாள்வரை நிலவும் இந்தச் சமூகத் தீமையைக் கொண்டு நாம் அறிகிறோம். ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், செயல்பாடுகளால், இயல்புகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். மாறாக, அவர்களது பெற்றோர் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பன போன்ற தரவுகளால் அல்ல. ஆனால், இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் இந்தத் தவறினைச் செய்தனர். அதுபோல, இன்றும் ஒவ்வொரு குடும்பத்திலும், பங்கிலும், தொழிலகத்திலும், ஊரிலும் இத்தகைய தவறுகள் நடந்துகொண்டே இருக்கலாம். எனவே, இன்று நான்...
Like this:
Like Loading...
அத்திமர உவமையில் இரண்டு கருத்துக்களை நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். 1. அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே அமைந்திருக்கிறது. திராட்சைத்தோட்டத்தின் மண் செழுமையான, வளமையான மண். தளிர்க்கவே தளிர்க்காது என்று நாம் நினைக்கிற ஒரு செடி கூட திராட்சைத்தோட்டத்தில் வைத்தால், தளிர்த்துவிடும். அந்த அளவுக்கு வாழ்வு தரக்கூடிய மண், திராட்சைத்தோட்ட மண். 2. அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. ஓர் அத்திமரம் காய்த்து கனி தர அதிகபட்சம் எடுக்கக்கூடிய ஆண்டுகள் மூன்று ஆண்டுகள். ஓர் அத்திமரம் வைத்த முதல் இரண்டாவது ஆண்டிலே கனி தர ஆரம்பித்துவிடும். ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்தும் கனி தரவில்லையென்றால், அந்த அத்திமரம் கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கே இந்த அத்திமரம் திராட்சைத்தோட்டத்திற்கு நடுவே வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது செழுமையான, வளமையான பகுதியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த அத்திமரம் வைத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. இனிமேல் அது கனிதருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி கனி தருவதற்கு வாய்ப்பே இல்லாத...
Like this:
Like Loading...
யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும். தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. இன்றைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன. தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார். தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும்,...
Like this:
Like Loading...
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று – என்கிற இந்த வரிகள், திருப்பாடல் 118: 22 லிருந்து எடுக்கப்பட்டது. திருப்பாடல் ஆசிரியர் இந்த உருவகத்தை இஸ்ரயேல் மக்களுக்குப் பயன்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள். யூதர்கள் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள மக்களாலும் வெறுக்கப்பட்டவர்கள். அவர்கள் நாடு முழுவதிலும் அடிமைகளாக, வேலையாட்களாக வாழ்ந்தவர்கள். ஆனால், அவர்களைத்தான் கடவுள் சிறப்பாக தேர்ந்து கொண்டார். இதனைத்தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகள் மூலமாக விளக்குகிறார். இந்த திருப்பாடல் வரிகளில் வருவதைப்போல, இயேசுவும் விலக்கப்பட்ட மனிதராகவே ஆதிக்கவர்க்கத்தாலும், அதிகாரவர்க்கத்தாலும் பார்க்கப்படுகிறார். அவர்கள் மக்களை தூண்டிவிட்டு அவரை, கொலை செய்ய நினைக்கிறார்கள். அவரை ஒதுக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், விரைவிலே, தாங்கள் யாரை ஒதுக்க நினைத்தோமோ அவர் தான், கடவுளின் திருமகன், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், கடவுளின் ஆவியைப்பெற்றவர் என்பதை அறிந்துகொள்வார்கள். தாங்கள் செய்த செயல்களை நினைத்து, மனம் வருந்துவார்கள். இந்த சமுதாயம் ஒதுக்கிவைத்த...
Like this:
Like Loading...
செல்வரும், இலாசரும் உவமை நமக்கு அருமையான சிந்தனைகளைத் தருகிறது. செல்வரைப்பற்றிய உயர்ந்த பார்வையும், ஏழைகளைப்பற்றிய தாழ்ந்த பார்வையும் இங்கே தவிடுபொடியாகிறது. இங்கு தீர்ப்பிடப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, இந்த சமூகத்தின் மட்டில் நமக்கு அக்கறை வேண்டும் என்கிற எண்ணத்தை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பணக்காரனின் தவறாக இங்கே சித்தரிக்கப்படுவது அக்கறையின்மை. இந்த உலகத்தைப்பற்றிய அக்கறையின்மை. துன்பத்தைப் பார்த்தும், உதவி செய்ய ஆற்றல் இருந்தும் ஒருவிதமான பாராதத்தன்மை, மற்றவர்களின் வறுமையைப்பார்த்தும் உணர்வற்ற தன்மை. இவைதான் செல்வந்தனின் தண்டனைக்குக்காரணம். தன் கண்முன்னே ஒருவன், சாகக்கிடக்கிறான் என்பது தெரிந்தாலும், அதைப்பற்றிய சிறிதும் கவனம் எடுக்காத அவனுடைய உணர்வுகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படக்கூடியவை. இந்த உலகத்தோடு நாமும் ஒருவகையில் இணைந்தவர்கள் தான். நமக்கும் இந்த உலகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். நாம் விரும்பாவிட்டாலும், அதை நமது வாழ்வில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும். அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
Like this:
Like Loading...