Tagged: இன்றைய வசனம் தமிழில்
“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. பொதுவாக, விலங்குகள் பலிபீடத்தில் காணிக்கையாக செலுத்தப்படும்போது, விலங்கு முழுவதையும் எரிபலியாக செலுத்துவதில்லை. மாறாக, எரிபலிக்கு அடையாளமாக, அந்த விலங்கின் சிறிய பகுதியை மட்டும் பயன்படுத்துவர். மீதி உள்ள இறைச்சியை பலிசெலுத்துகின்ற குருவும், பலியிட்ட குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்வர். ஒரு விலங்கு பலியிடப்படுகிறது என்றால், அதனுள் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பது பொருள். ஏனெனில் அது கடவுளுக்கு உரியது. கடவுளுடையது. அந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் மனிதருக்குள்ளும் கடவுள் குடிகொள்கிறார் என்பது அதனுடைய பொருள். இந்தப்பிண்ணனியில் இந்தப்பகுதியை நாம் பார்க்க வேண்டும். இது ஒருவேளை காட்டுமிராண்டித்தனமான செயலாகவோ, சிலைவழிபாடு போலவோ தெரியலாம். ஆனால், அதன் பிண்ணனியின் பொருள் தெரிந்தால், நம்மால் அதன் பொருளை நல்லமுறையில் புரிந்துகொள்ள முடியும். இங்கே சதை, இரத்தம் என்கிற வார்த்தையை நாம் இறைவார்த்தைக்கு ஒப்பிடலாம். ஆண்டவரின் வார்த்தையை நாம் தியானித்து அந்த வர்த்தையை உள்வாங்குகின்றபோது, இறைப்பிரசன்னம்...
Like this:
Like Loading...
இயேசுதான் வாழ்வு தரும் உணவு. நமது வாழ்வுக்கு அடிப்படையும் இதுதான். இயேசு தரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் இந்த உலகவாழ்வில் மட்டுமல்ல, வரக்கூடிய மறுஉலக வாழ்வையும் இழந்துவிடுவோம். இயேசு நமக்கு தரக்கூடிய வாழ்வை, இயேசு நமக்காக ஏற்பாடு செய்திருக்கிற வாழ்வை, நாம் பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதப்போதகர்கள் இதுபற்றி அடிக்கடி ஒரு சொல்லாடல் கையாள்வதுண்டு. ”பாலைநிலத்தில் தங்கியவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லையென்று”. அதனுடைய பொருள் இதுதான்: எகிப்திலிருந்து மக்கள் வாக்களிப்பட்ட தேசத்திற்கு கால்நடையாக வந்தனர். அப்போது பாலைநிலத்தில் அவர்கள் தங்கினர். ஆனால், அது அவர்கள் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இன்னும் பயணம் செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அந்த பாலைவனத்திலே தங்கியிருப்பதை விரும்பினார்கள். வாக்களிப்பட்ட தேசத்திற்குச் செல்கிறபோது எதிர்கொள்ளும் தடைகளைத்தாங்குவதற்கு அவா்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களுக்கு வாக்களிப்பட்ட தேசத்தில் இடமில்லை. அதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள். அதேபோலத்தான், இயேசுவின் அழைப்பு நிலையான வாழ்வுக்கு அழைப்பு. அந்த...
Like this:
Like Loading...
இயேசுவிடம் இருந்த கொள்கைத் தெளிவு நம்மிடம் இருப்பதாக. இயேசு தன்னுடைய வாழ்வும், பணியும் எத்தகையது என்பதை நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். “என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்” என்று தெளிவாகச் சொன்னார். நாம் யார் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்கிறோம்? நமது சொந்த விருப்பத்தையா, அல்லது இறைவனின் விருப்பத்தையா? நமது விருப்பத்தை நிறைவேற்ற உழைத்தால், நமக்கு ஏமாற்றமும், தோல்வியுமே கிட்டும். ஆனால், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி உழைத்தால், இறுதி வெற்றி, இறுதி மன நிறைவும் நிச்சயமாக நமக்குக் கிடைக்கும். இதை மறக்க வேண்டாம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உமது அன்புத் திருமகன் இயேசுவுக்காக நன்றி கூறுகிறோம். அவர் தமது சொந்த விருப்பத்தின்படி வாழாமல், உமது விருப்பத்தின்படி வாழ்ந்து எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். அவரைப் பின்பற்றி நாங்களும் உமது விருப்பத்தின்படி வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்....
Like this:
Like Loading...
“கண்டு நம்புவது“ என்பது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், பொதுவாக, பார்த்தால் நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கேட்பதை வைத்து நம்புகிறவர்களை விட, பார்ப்பதை வைத்து நம்புகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உண்மை என்று தெரிய வேண்டுமென்றால், நானே நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தான் அதிகம். இயேசுவின் சீடருள் ஒருவரான தோமாவும், நான் கண்டால் தான், இயேசு உயிர்த்திருக்கிறார் என்று நம்புவேன் என்று சொல்கிறார். இந்த வரிசையில் இன்றைய நற்செய்தியில் வரும் யூதர்களும், அடையாளங்களையும், அருங்குறிகளையும் கண்டு நம்புகிறோம், என்று சொல்கிறார்கள். நமது வாழ்க்கை வெறும் கண்களால் பார்ப்பதை அடிப்படையாக வைத்து மட்டும் வாழ்ந்தால், நாம் தாம் ஏமாளிகளாக இருப்போம். ஆனால், வாழ்வை, நடக்கும் நிகழ்வுகளை பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தால் தான், சரியான வழியில் செல்ல முடியும். இதை இயேசு...
Like this:
Like Loading...
”எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று யூதர்கள் இயேசுவிடத்திலே கேட்டார்கள். யூதர்கள் இப்படி கேட்டதற்கு பிண்ணனி இல்லாமல் இல்லை. யூதர்களைப்பொறுத்தவரையில் இந்த உலகத்திலே மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது நல்லதும், கெட்டதும் செய்கிறவர்கள். இவர்கள் நன்மை அதிகமாகச்செய்தால், நல்லவர்கள் குழுவில் சேர்ந்துவிடுவார்கள். இயேசுவிடத்திலே மேற்சொன்ன கேள்வியைக்கேட்டபோது, அவர்கள் நல்லது செய்வதற்கான வழிமுறைகளை இயேசு சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால் இயேசு அவர்கள் எதிர்பாராத பதிலைச்சொல்கிறார். ”கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்பதுதான் அந்தப்பதில். அதாவது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் உடனான ஓர் உறவுநிலை. நாம் கடவுளோடு கொள்ளக்கூடிய நட்புறவு. கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளைப்பார்த்து நாம் ஓடி ஒளியத்தேவையில்லை. கடவுளை நமது தந்தையாக, நல்ல நண்பராக எண்ணுவதுதான் நம்பிக்கை. இயேசுதான் கடவுளை நமக்குக்காட்டுகிறவராக, காட்டியவராக இருக்கிறார். எனவே, இயேசுவில்...
Like this:
Like Loading...