Tagged: இன்றைய வசனம் தமிழில்
“என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். தந்தை இறைவனை யாருமே கண்டதில்லை. ஆனால், இயேசு அந்த இறைவனின் முகமாக இருக்கின்றார். அவரைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டதற்கு இணையாகின்றார்கள் என நம்பிக்கையுடன் சொல்கின்றார். அந்த அளவுக்கு இயேசுவின் செயல்களும், எண்ணங்களும் அமைந்திருந்தன. நாம் இப்படிச் சொல்ல முடியுமா? என்னைக் காண்பவர்கள் ஆண்டவர் இயேசுவையே காண்கின்றனர் என்னும் வகையில் என்னால் வாழ முடியுமா, பணியாற்ற முடியுமா? இதுவே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அறைகூவல். அன்னை தெரசாவைக் கண்டவர்கள் ஆண்டவர் இயேசுவை அவரில் கண்டனர். புனிதர்கள், மறைசாட்சிகளைக் காண்பவர்கள் ஆண்டவரின் திருமுகத்தைக் காண்கின்றனர். இதுவே நற்செய்தி அறிவிப்பு, இதுவே சாட்சிய வாழ்வு. நமது வாழ்வும் அவ்வாறு அமைய முயற்சி எடுப்போம். மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படி வாழ்ந்த இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்....
Like this:
Like Loading...
யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு....
Like this:
Like Loading...
“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்னும் இயேசுவின் மிகப் பிரபலமான இந்த சொற்களை இன்று நாம் சிந்திப்போம். நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின், இறைமகன் இயேசுவின் விருப்பம். நாம் துன்புறவேண்டும், மடியவேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருக்க முடியாது. இதனை நம் விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நாம் நிறைவாழ்வு பெறவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். வாழ்வது ஒருமுறை, அந்த ஒரு வாழ்வும் நிறைவானதாக, முழுமை பெற்றதாக அமைய வேண்டும். மானிடர்களின் உளவியல் தேவைகள் பற்றி ஆய்வுசெய்த ஆபிரகாம் மாஸ்லோ என்னும் அறிஞர் “ஆளுமை நிறைவுத் தேவை” (Self Actualization) என்பதையே மானிட நிறைவுத் தேவையாகக் குறிப்பிட்டார். இயேசுவின் நிறைவாழ்வு என்பதுவும் அதுவே. எந்த நோக்கத்துக்காக இறைவன் நம்மைப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்படி வாழ்வதுதான் நமது நிறைவாழ்வு. “தந்தை எனக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதே என் உணவு” (யோவா 4:...
Like this:
Like Loading...
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என்கிற இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஒன்றாய்“ என்பதன் பொருள் என்ன? நமது அடிப்படை மறைக்கல்வி, கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் எனவும், ஆனால் ஒரே கடவுள் எனவும் கற்றுத்தந்திருக்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கிறபோது, மூன்று பேருக்கும் ஒரே ஆற்றல், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பது என்று சொல்லப்படுகிறது. இதனை அடியொற்றி நாம் சிந்திக்கிறபோது, இயேசு தந்தையாகிய கடவுளின் இதயத்தோடு இணைந்தவராய் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். என்னைப் பார்க்கிறவர், தந்தையையே பார்க்கிறார் என்று இயேசு சொல்வதன் பிண்ணனியும் இதுதான். தந்தையாகிய கடவுளைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் இயேசுவைப் பார்த்தாலே போதும். ஏனெனில், இயேசு கடவுளின் பண்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். இயேசு பாவிகளை பெருந்தன்மையோடு மன்னிக்கிறபோது, கடவுளின் மன்னிப்பை நாம் பார்க்கலாம். இயேசு நற்செய்தி அறிவிக்கிறபோது, கடவுளின் வார்த்தையை நாம் கேட்கலாம். இயேசு புதுமைகள் செய்கிறபோது, கடவுளின் வல்ல...
Like this:
Like Loading...
உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான போராட்டம் ஒரு மனிதனின் வாழ்வில் நீண்ட, நெடிய போராட்டமாக இருந்து வருகிறது. ஆன்மா, உடலில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து போராடி வெளியே வருவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் எது பெரியது, என்கிற கேள்வியை விட, எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதனை, இயேசு விளக்குகிறார். வாழ்வு தரக்கூடியது, முடிவில்லாதது ஆவி தான் என்கிறார். இது உடலின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது ஆகாது. ஆனால், அதே வேளையில், ஆவியின் இயல்புகளை, அதன் மதிப்பை இது அதிகப்படுத்திக் காட்டுகிறது. வெறும் உடல் ஆசைக்காக சாப்பிடுவது பெருந்தீனிக்கு சமமானது. ஆனால், நன்றாக உழைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று அதற்காக சாப்பிடுவது, உடலின் இயக்கத்திற்கு, ஆவியின் தூண்டுதலுக்கும் பயன்படுவதாக அமைகிறது. ஆக, நமது எண்ணம், நமக்குள்ளாக இருக்கிற இந்த ஆவியை இயக்குவதாக அமைய வேண்டும். அந்த ஆவி தன்னெழுச்சி பெற வேண்டும். அது நம்மை இயக்கிக் கொண்டே...
Like this:
Like Loading...