Tagged: இன்றைய வசனம் தமிழில்
உணவருந்துவதற்கு முன் இயேசு தனது கைகளைக் கழுவாவதைக்கண்டு பரிசேயா்கள் வியப்படைந்திருக்க வேண்டும். அது சுகாதாரம் என்பதற்காக அல்ல, மாறாக, அது கடைப்பிடிக்க வேண்டிய சடங்குமுறைகளுள் ஒன்று. மக்கள் மத்தியில் மிகப்பெரிய போதகராக மதிக்கப்படும் இயேசு அடிப்படை சடங்குகளைக்கூட பின்பற்றாதது, பரிசேயர்களுக்கு எரிச்சலையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். பரிசேயர்களுக்கு வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அது காட்டும் உள்ளார்ந்த அர்த்தத்திற்கு கொடுக்க மறந்துவிட்டார்கள். வெளிப்புற அடையாளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்ற மனநிலை அவர்களுக்கு இருந்தது. அப்படி வாழ்ந்தாலே கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்க முடியும் என்ற தவறான எண்ணம் அவர்களிடத்திலே இருந்தது. இத்தகைய மனநிலையை தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். தினமும் ஆலயத்திற்கு செல்வதும், விவிலியத்தை ஆழ்ந்துபடித்து தியானிப்பதும், திருச்சபைக்கு நம்மால் இயன்றதைக் கொடுப்பதும் மட்டும்தான் கிறிஸ்தவனின் கடமை என்ற பாணியில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டு உள்ளத்தில் வஞ்சகமும், தற்பெருமையும், பொறாமையும் இருந்தால் நாமும் பரிசேயர்களைப்போலத்தான். அப்படிப்பட்ட நிலைக்கு...
Like this:
Like Loading...
புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ள முயலாத மனநிலை இருக்கிறவரை எத்தனை அடையாளங்கள் கொடுத்தாலும் அது வீணானதுதான் என்பது தான் இயேசு இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32) மூலமாக கற்றுத்தரும் செய்தி. யூதர்கள் நம்புவதற்கு ஏற்றவாறு ஏதாவது அதிசயங்களைச் செய்யச் சொல்லி இயேசுவிடம் வலியுறுத்துகிறார்கள். ஏனென்றால், அடையாங்களை வைத்தே யூதர்கள் ஒருவரை நம்புவதா? வேண்டாமா? என்று முடிவு செய்வர். இயேசுவுக்கு பிறகு கி.பி. 45 ம் ஆண்டில் தேயுதஸ் என்பவர், மக்களை எல்லாம் அழைத்து ஓடுகின்ற ஆற்றை இரண்டாகப்பிளக்கப் போகிறேன் என்று மக்களையெல்லாம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவனால் முடியவில்லை. இது போன்ற அடையாளங்கள் செய்கிறவர்களின் பின்னால் செல்வது யூதர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், அடையாளமாக இருக்கக்கூடிய இயேசுவை அடையாளம் காண, அவர்களால் முடியவில்லை. சாலமோனின் ஞானத்தை எங்கிருந்தோ ஆட்சி செய்த, ஓர் அரசியால் அடையாளம் காண முடிந்தது. யோனா கடவுளின் தூதர் என நினிவே மக்களால் அடையாளம்...
Like this:
Like Loading...
கடவுளிடம் நாம் பல விண்ணப்பங்களை வைத்து நம்பிக்கையோடு மன்றாடுகிறோம். நாம் கேட்பதை பெற்றுக்கொண்ட பிறகு, நமது மனநிலை என்ன? என்பதுதான், இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19) நமக்குத்தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. தேவை இருக்கிறபோது, ஓயாமல் கடவுளை தேடுகிற நாம், தொந்தரவு செய்கிற நாம், நமது தேவை நிறைவேறிய பிறகு, கடவுளை நாடாதவர்களாக இருப்பது தான், இன்றைய உலக நியதி. அதைத்தான் இந்த வாசகமும் பிரதிபலிக்கிறது. பத்து தொழுநோயாளர்கள் இயேசுவைச் சந்திக்கிறார்கள். தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர், இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பது, அவர்கள் அனுபவித்திராத ஒன்றல்ல. முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுவை நாடி தேடி வருகிறபோது, மனம் கசிந்துருகி மன்றாடுகிறார்கள். ”ஐயா, எங்கள் மீது மனமிரங்கும்” என்று சொல்கிற, அந்த தொனியே, அவர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அவர்கள் குணமடைந்த...
Like this:
Like Loading...
இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28) உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். உணர்வுகளால் உந்தப்பட்ட அவள், இயேசுவைப் பெற்றேடுத்த தாயைப்புகழ்கிறாள். உணர்வுகள் நல்லது தான். ஆனால், உணர்வு அளவில் நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, உண்மை நிலைக்கும், யதார்த்த நிலைக்கும் நாம் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தருகிறார். நம்முடைய வாழ்வில் உணர்வுகளை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறோம். அழுகையாக, சிரிப்பாக, கோபமாக, வெறுப்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். உணர்வு அளவிலே நாம் நின்று விடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து யதார்த்த நிலைக்கு, உண்மை நிலைக்கு செல்வதுதான் நம்முடைய பக்குவத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று. எந்த ஒரு நிகழ்வை நாம் வாழ்வில் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளா்த்துக்கொள்வதுதான் யதார்த்த நிலைக்கு செல்வது. இயேசு அந்தப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடவில்லை. உணர்வு அளவிலே தங்கிவிடவில்லை. அதனைக்கடந்து தெளிந்து நிலைக்குச் செல்கிறார். அதனை நாமும் கற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறார். இயேசு உணர்வு நமக்கு வேண்டாம்...
Like this:
Like Loading...
கி.பி 1571 இல் நடந்த கடற்போரில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வென்றபோது, அவர்களுக்கு கிடைத்த வெற்றி, செபமாலையின் மகத்துவத்தால் விளைந்தது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக திருத்தந்தை ஐந்தாம் பயஸ் இந்த நாளை வெற்றி அன்னையின் திருவிழாவாக அறிவித்தார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரி காலத்தில் இந்த நாள் செபமாலை அன்னையின் திருவிழாவாக அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. துருக்கியர் இரண்டாம் முறையாக தோல்வியுற்றபோது, திருத்தந்தை ஆறாம் கிளமண்ட் இத்திருவிழாவை வழிபாட்டு அட்டவணையில் சேர்த்தார். ஆனால், திருத்தந்தை பத்தாம் பயஸ், இந்த விழாவானது ஏற்கெனவே கொண்டாடப்பட்ட அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடுவதே, சிறந்தது எனக்கருதி, அதற்கான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன்படி, தற்பொழுது இவ்விழாவானது, அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடப்படுகின்றது. செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும். இது...
Like this:
Like Loading...