அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன
திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....