எல்லோர்க்கும் எல்லாமுமான இயேசு
20.02.14 – மாற்கு 8: 27 – 33 இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், மக்கள் நடுவில் திருமுழுக்கு யோவானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள். இயேசு ஒரு முழுமையின் வடிவம். எல்லார்க்கும் எல்லாமுமாக இருந்தவர், இருக்கிறவர் இயேசு. எனவேதான் இயேசுவை மக்கள் பலவிதமாக பார்த்தார்கள். இயேசுவின் தனித்தன்மையும் இதுதான். இயேசு நமது மகிழ்ச்சியில்...