Tagged: இன்றைய சிந்தனை

எலிசாவின் பிடிவாதம்

2அரசர்கள் 2: 1, 6 – 14 1அரசர்கள் புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற...

இறையடியார்கள்

1அரசர்கள் 21: 17 – 29 கடவுள் முன்னிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்தம் திருத்தமாக இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்ட ஆகாபு அரசன், தன் மனைவியின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, அவனைக் கொலை செய்துவிடுகிறான். அந்த தோட்டத்தை அபகரிப்பதற்காகச் செல்கிறான். ஆனால், ஆண்டவர் இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். தவறு செய்வனான ஆகாபு மட்டுமல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய மனைவி ஈசபேலும் இறைவனின் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாகிறாள். இந்த பகுதியில், இறைவாக்கினரின் பணியை நாம் சற்று ஆழமாகப் பார்க்கலாம். வரலாற்றின் துணிவுள்ள சில மனிதர்களின் விழுமியங்களை இங்கே எலியாக படம்பிடித்துக் காட்டுகிறார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவருடைய தவறை அவருடைய நெஞ்சுக்கு நேரே நின்று எதிர்கொள்வது தான் அந்த விழுமியம். ஆகாபு அரசன் தீய, கொடூரமான, ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவனுக்கு எதிராக, அவனுடைய...

நீதி வழங்கும் இறைவன்

1அரசர்கள் 21: 1 – 16 ஆண்டவர் எப்போதும் ஏழைகள் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்கிறார் என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சாட்சியாக அமைகிறது. இறைவன் இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கிறார். அந்த விருப்பத்தோடு தான், இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்கு இந்த உலகத்தின் எல்லா செல்வங்களின் மீதும் நிர்வகிக்கிற பொறுப்பை வழங்குகிறார். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இந்த உலகத்தைப் படைத்ததன் நோக்கமாகும். பேராசை கொண்ட மனிதன், இந்த உலகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகிறான். அங்கே அடிமைத்தனம் உருவாகிறது. வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொருளாதாரப் பிளவை உண்டாக்குகிறான். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாக, அதிகாரவர்க்கமும், அவர்கள் அடக்கி ஆள்வதற்கு பாமரரர்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இறைவன் எப்போதும் எளியவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழைகள் சார்பாகவும், மக்களுக்கு சரியான...

மூவொரு இறைவன் பெருவிழா

கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து...

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணி 11: 21 – 26, 13: 1 – 3 ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகமாயின. திருத்தூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளுக்கு தப்பியோடினர் (8: 1). ஆங்காங்கு சிதறுண்டவர்கள் அமைதியாக இல்லை. மாறாக, தாங்கள் சென்ற இடங்களிலேயே நற்செய்தியை அறிவித்து வந்தனர்(8: 4). குறிப்பாக, பிலிப் அன்னகர் ஒருவருக்கு நற்செய்தியை விளக்கிக்கூறுவதைப் பார்க்கிறோம்(8: 5 – 40). சவுலின் மனமாற்றம்(9ம்அதிகாரம்) மற்றும் புறவினத்து மக்களுக்கான பேதுருவின் நற்செய்திக்குப்பிறகு(10ம் அதிகாரம்), மீண்டும் எருசலேம் நோக்கி அனைவருடைய பார்வையும் திரும்புகிறது. எருசலேமில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்கு, புறவினத்து மக்களுக்கான தன்னுடைய நற்செய்தியையும், அவர்களின் மனமாற்றத்தையும் எடுத்துரைக்கிறார்(11: 18). ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். (11: 19). அவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அவர்களது நற்செய்தியின் பொருட்டு, பெருந்தொகையான...