கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்மை மீட்பார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு மார்ச் மாதம் முழுதும் நம்மோடு கூடவே இருந்த நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்து ஒரு சேதமும் நம்மை தாக்காதபடிக்கு காத்து வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றியை நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தெரிவித்து,அவர் பாதம் பணிவோம். இதுபோல் வருகிற ஏப்ரலிலும் நம்மை காத்து வழிநடத்த வேண்டுமாய் அவரிடத்தில் கெஞ்சி மன்றாடுவோம்.ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகில் வாழ்வது ஆண்டவரின் கிருபையே.நாம் செய்தி தாளில் வாசித்து பார்ப்போமானால் ஒருநாளில் எவ்வளவு விபத்து நடக்கிறது என்று நாம் யாவரும் அறிந்த ஓன்று. ஆனாலும் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாதபடிக்கு காத்து வந்த தேவனை மனதார ஸ்தோத்தரித்து நன்றிபலி ஏறெடுப்போம். நான் இன்று உயிரோடு இருப்பது ஆண்டவரின் மேலான கிருபையே. கடந்த மார்ச் 18ம் தேதி நான் என் கணவருடன் பைக்கில் சென்று கொன்று இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவு ஒரு பெரிய விபத்து நேரிட இருந்தது....